நடிகர் விஷால், ஒரு பட விழாவில் பேசுகையில், திரைப்பட உரிமையாளர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது இவர்களை திரையரங்கின் உள்ளே அனுமதிக்காதீர்கள் என்று பேசியிருக்கிறார்.
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிப்பில் விக்னேஷ் நடித்த ரெட் ஃப்லவர் படம் வரும் 8ம் தேதி வெளியாகவுள்ளது. ஆண்ட்ரூ பாண்டியன் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட விழா கமலா திரையரங்கில் நடந்தது. இதில் விஷால், இயக்குனர்கள் பி.வாசு, சுராஜ் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ரெட் ஃப்ளவர் திரைப்படத்தில் நடிகர் விக்னேஷூக்கு ஜோடியாக மனிஷா ஜஷ்னானி நடிக்கிறார். படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு கே.தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய , சந்தோஷ் ராம் இசை அமைக்க , படத்தொகுப்பு அரவிந்தன் ஆறுமுகம் அமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன். ஆகஸ்ட் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது ரெட் ஃப்ளவர். இந்த நிகழ்ச்சியில் விஷால் பேசுகையில்,
“ இந்த வருடம் நடைபெற்ற கதையை எடுக்கவே இயக்குநர்கள் திண்டாடுகின்றனர். ஆனால், ஆண்ட்ரூ 2047-ல் என்ன நடக்கும் என்பதை திரைக்கதையாக்கி படமாக எடுத்துள்ளார்.
திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஒரு கோரிக்கை. படம் வெளியாகும் முதல் 3 நாட்களுக்கு விமர்சகர்களை உள்ளே அனுமதிக்காதீர்கள். வெளியில் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.
அதேபோல் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு முக்கியமான கோரிக்கை. தமிழ் சினிமாவில் ஒரே நாளில் 10 படங்கள் வெளியாகிறது, எந்த படத்துக்கும் சரியான அளவில் தியேட்டர் கிடைப்பதில்லை. அதனால் ரிலீஸை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும்.
சீக்கிரம் நடிகர் சங்க கட்டிடத்தை திறந்துவிடலாம். என்னுடைய பிறந்தநாள் ஆகஸ்ட் 29. அன்று ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. திருமணம் நாள் குறித்த செய்தி விரைவில் அறிவிக்கப்படும்." என்று பேசினார்.