மீன் எண்ணெய் மாத்திரை ஏன் சாப்பிடணும்? யார் சாப்பிடலாம்?

Fish oil pills
Fish oil pills
Published on

எண்ணெய் பசை அதிகம் கொண்ட மீன்களின் திசுக்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யில் ஒமேகா 3 வகை கொழுப்புகள் அதிகம் உள்ளது. இது நம் உடலுக்கும், மூளைக்கும் மிகவும் நல்லது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு, பாலூட்டும் தாய்மார்களுக்கு, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு, ரத்தக்குழாய் காயங்கள் ஆறுவதற்கு, இதய பிரச்னை உள்ளவர்களுக்கு ஒமேகா 3 கொழுப்பு நன்மை செய்கிறது.

EPA (Eicosa pentaeonaic acid) and DHA (Docosa Hexaenoic acid) இது இரண்டும் சேர்ந்தது தான் ஒமேகா 3 ஆசிட் ஆகும். இந்த ஒமேகா 3 கொழுப்புச்சத்து எல்லோருக்கும் அவசியமா என்று கேட்டால், EPA மற்றும் DHA பொதுவாக நமக்கு அசைவ உணவுகளில் இருந்து கிடைக்கிறது. நெத்திலி, மத்தி போன்ற மீன்களில் இருந்து ஒமேகா 3 கொழுப்பை எடுக்க முடியும். ஆனால், சைவ உணவு சாப்பிடுபவர்கள் இதை எடுத்துக் கொள்வதில்லை.

இருப்பினும் அவர்களின் மூளை செயல்திறன் நன்றாக தானே இருக்கிறது என்று கேட்டால், பொதுவாக இவர்கள் விதை வகைகள் அதிகம் எடுத்துக் கொள்வார்கள். இதில் ALA என்று சொல்லப்படும் Alpha linolenic acid என்று ஒன்று உள்ளது. இது ஒருவகை ஒமேகா ஆசிட் ஆகும். இது சாதாரண நட்ஸ் வகைகள், விதை வகைகள், சுண்டல், வெந்தயம் போன்றவற்றில் அதிகம் உள்ளது. இந்த ALA உடலில் உள்ள சில என்சைம்கள் மூலமாக ஒமேகா 3 ஆசிட் கொழுப்பாக மாறிவிடுகிறது. 

யார் இதை எடுக்க வேண்டும்? எவ்வளவு எடுக்க வேண்டும்? 

பொதுவாக ஒரு நாளைக்கு EPA மற்றும் DHA 250 முதல் 500 கிராம் எடுப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது. இதில் கர்ப்பிணி பெண்கள் 1000 மில்லி கிராமும், இதய நோயாளிகள் 1000 முதல் 2000 மில்லி கிராம் வரை எடுக்கலாம். யாருக்கு இது தேவைப்படாது என்றால் அசைவம் அதிகம் எடுத்துக் கொள்பவர்கள், சைவர்கள் அதிகம் ALA இருக்கும் நட்ஸை எடுத்துக் கொள்பவர்களுக்கு தேவைப்படாது.

Cod liver Oil என்று பிரபலமாக இருக்கும் மீன் மாத்திரை விற்கப்படுகிறது. அதில் சரியான அளவில் EPA மற்றும் DHA வை பார்த்து வாங்க வேண்டும். ஒரு மாத்திரையில் குறைந்தது 300 மில்லி கிராம் EPA மற்றும் DHA இருக்க வேண்டும். சைவர்கள் மீன் எண்ணெய் மாத்திரைகள் சாப்பிட மாட்டார்கள் என்றால், அவர்களுக்கு 2000 முதல் 3000 மில்லி கிராம் ALA இருக்கக்கூடிய Supplements கிடைக்கிறது. அதை அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
வேப்பிலையின் 5 விதமான பயன்கள்... வீட்டில் இப்படி உபயோகித்துப் பாருங்கள்!
Fish oil pills

அதிகமாக ஒமேகா 3 வேண்டும் என்று விரும்புவோர் Algal oil supplements போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். கடலில் இருந்து எடுக்கப்படும் ஆல்கேவில் அதிகப்படியாக ஒமேகா 3 கொழுப்புச்சத்துக்கள் உள்ளன. அசைவர்கள் மத்தி, நெத்திலி மீன் வாங்கி சாப்பிடுவது நல்லது.100 கிராமில் 1.8 முதல் 2 கிராம் அதாவது 2000 மில்லி கிராம் ஒமேகா 3 கிடைக்கிறது. இதுவே மத்தி மீனாக இருந்தால் 100 கிராமில் 1.5 கிராம் அதாவது 1500 மில்லி கிராம் ஒமேகா 3 கிடைக்கிறது. வாரத்திற்கு ஒருமுறை இந்த மீன்களை வாங்கி சாப்பிட்டாலே உடலுக்கு தேவையான ஒமேகா 3 கொழுப்பு கிடைத்துவிடும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

இதையும் படியுங்கள்:
டிரெண்டாகி வரும் 'கார்டிசால் காக்டைல்'... அப்படி அதில் என்ன தான் இருக்கு?
Fish oil pills

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com