துல்கர் சல்மான் நடிப்பில் “கிங் ஆஃப் கோதா” திரைப்படத்தின் டீசர் வெளியீடு!!!

துல்கர் சல்மான் நடிப்பில் “கிங் ஆஃப் கோதா” திரைப்படத்தின் டீசர் வெளியீடு!!!

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் Wayfarer Films இணைந்து வழங்கும், மெகா ஸ்டார் துல்கர் சல்மான் நடிப்பில் “கிங் ஆஃப் கோதா” திரைப்படத்தின் பரபரக்க வைக்கும் அட்டகாசமான டீசர் தற்போது வெளியானது.

Zee Studios மற்றும் Wayfarer Films' வழங்கும் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்பையும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இறுதியாக தற்போது இப்படத்தின் இரத்தம் தெறிக்கும், அதிரடியான டீசரை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பல மொழிகளில் பிசியாக நடித்து வருபவர் நடிகர் துல்கர் சல்மான். தற்போது அவர் நடித்துள்ள மிரட்டலான திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. இந்த படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். இவர்களுடன் செம்பன் வினோத் ஜோஸ், ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் ஷபீர், பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டீசரில் கோதா மக்கள் அரசனைக் காண்பது போல் மொத்தமாக ஒதுங்கி துல்கர் சல்மான் காருக்கு வழி விடுகின்றனர். ஸ்டைலான பழம்பெருமை மிகுந்த மெர்சிடிஸ் காரில் 'தி கிங்' (துல்கர் சல்மான்) வருவதைப் பார்க்கும்போது, நம் மொத்த கவனமும் அவர் மேல் குவிகிறது. மன்னிக்கத் தெரியாத வன்முறையாளனாக, இரக்கமற்ற கொடூரனாக வசீகரிக்கும் தோற்றத்தில் மிரட்டுகிறார் துல்கர் சல்மான்.

'கிங் ஆஃப் கோதா' டீசர் கோதா மக்களின் வாழ்க்கையை காணும் ஆவலைத் தூண்டுகிறது. அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியிருக்கும் இப்படத்தின் இந்த டீஸர், நிச்சயமாகப் பார்ப்பவர் அனைவரிடத்திலும் ஒரு பேரதிர்வை ஏற்படுத்துவதுடன், திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இப்படம் 2023 ஓணம் பண்டிகை அன்று உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க தமிழகத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com