

நடிகர் மம்முட்டியின் மகனுமான நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகில் முன்னனி நடிகர்களில் ஒருவராக அறியப்படுகிறார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான வலம் வரும் இவர், தாய்மொழியான மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
துல்கர் சல்மான் சமீப காலமாக நல்லப் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, இவர் தெலுங்கு இயக்குநர் பவன் சாதினேனி இயக்கத்தில் ஒருப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'ஆகாசமோல் ஓகா தாரா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் வேஃபேரர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 'கிங் ஆஃப் கோத்தா' மற்றும் சூப்பர் ஹீரோ படமான 'லோகா: சாப்டர் 1 - சந்திரா' படங்களை தயாரித்துள்ளார். இவரது தயாரிப்பில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்த'லோகா: சாப்டர் 1 - சந்திரா' படம் பெரும் வசூல் சாதனை படைத்ததுடன், மலையாள சினிமாவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. அடுத்ததாக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘காந்தா’.
இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க, நடிகர் சமுத்திரகனி, ராணா டகுபதி, சித்திக், அனிகா சுரேந்திரன் மற்றும் சௌபின் ஷாஹிர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜானு சாந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாக உள்ளது. காந்தா படத்தின் கதைக்களம் 1950களின் மெட்ராஸில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாகவும், மறைந்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.
இந்தத் திரைப்படம், வரும் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘காந்தா’ திரைப்படத்தின் டிரைலர் இன்று (நவம்பர் 6-ம் தேதி) வெளியாக உள்ளது.
சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் காந்தா வெளியாக இருந்த நிலையில் பல பிரச்சனைகளால் பலமுறை தள்ளிப்போடப்பட்டு இறுதியில் வரும்14-ம்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காந்தா படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியானது