Baakiyalakshmi update: ராமமூர்த்தியின் கடிதம்... கண்ணீரில் பாக்கியலட்சுமி குடும்பம்!

Baakiyalakshmi today promo
Baakiyalakshmi
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தியின் திடீர் மரணம் குறித்த கதைக்களம்தான் தற்போது நகர்ந்து வருகிறது. அந்தவகையில் அடுத்த ப்ரோமோ வெளியிடப்பட்டிருக்கிறது.

விஜய் டிவியில் ரசிகர்களை அதிகம் ஈர்க்கும் ஒரு சீரியல் பாக்கியலட்சுமி. ஒரு குடும்ப பெண் தன் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறி வருகிறார் என்பதும், குடும்பத்தையும் வேலையையும் சரி சமமாக எப்படி பார்த்து வருகிறார் என்பதும் முக்கிய கதையாக அமைந்திருக்கிறது. கிளை கதைகளும், சமுகம் புரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்களும் ஏராளம்.

அந்தவகையில் இந்த சீரியல் 1000 எபிசோட்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒரு முக்கிய கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. பாக்கியாவிற்கும், பாக்கியாவின் முடிவுகளுக்கும் எப்போதும் துணையாக இருக்கும் பாக்கியாவின் மாமனார் ராமமூர்த்தி உயிரிழந்தார்.

தனது 80வது வயது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய அவர், அடுத்த நாள் காலையில் எழவே இல்லை. அப்படியே உயிர் பிரிந்ததுபோல் காட்சி படுத்தப்பட்டிருந்தது. இறுதியாக பாக்கியாவிடம் மனம் விட்டு கண்கலங்கிப் பேசினார் ராமமூர்த்தி.  

சென்ற வாரத்திலிருந்து இந்த கதைகளமே விறுவிறுப்பாக சென்ற நிலையில், தற்போது அடுத்த ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, கோபியின் அப்பா மற்றும் பாக்கியாவின் மாமனாரான ராமமூர்த்தி இறப்பதற்கு முன்னர் வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அனைத்து காரியங்களும் முடிந்தப் பின்னர் குடும்பத்தினர் அனைவரும் வீடுத் திரும்பினர். ராமமூர்த்தி அறைக்குச் சென்று ஈஸ்வரி, பாக்கியா ஆகியோர் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, பீரோவிலிருந்து ஒரு கவரை பாக்கியா எடுக்கிறார். அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்தப்பின் தான் தெரிந்தது, அதில் கடிதங்கள் இருந்தன என்பது.

இதையும் படியுங்கள்:
இந்தப் படத்தை இரவில் பார்க்க உங்களுக்கு தைரியம் இருக்கா?
Baakiyalakshmi today promo

உடனே பாக்கியா இதுபற்றி ஈஸ்வரியிடம் கூறுகிறார். ஈஸ்வரி அந்த கடிதத்தைப் படித்து கதறி அழுகிறார். அதேபோல், பாக்கியா, செழியன், எழில் என அனைவருமே அவரவர்களின் கடிதங்களைப் படித்து அழுகின்றனர். அந்த கடிதங்கள் படிக்கும்போது வாசலிலிருந்து அவர் பார்ப்பது போலவும், படித்து முடித்தவுடன் வீட்டை விட்டு செல்வதுபோலவும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ப்ரோமோ முடிந்தது. இனி அடுத்த எபிசோட்களில் இந்த நிகழ்வுகளை காண முடியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com