என் இனிய தனிமையே பாடல் வெளியீடு!

வைக்கம் விஜயலட்சுமி
வைக்கம் விஜயலட்சுமி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

வளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீபதி, சகு பாண்டியன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையில் உருவாகும் “என் இனிய தனிமையே” என்கிற அவருடைய அடுத்த படத்திற்காக ஆட்டோ புலி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்துடன் கைகோர்க்கிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். நாயகியாக ரீஷா நடிக்கிறார். ஸ்ரீபதி 2023ல் வெளியாக உள்ள சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

மோகன் டச்சு இயக்கத்தில் கே.யு.கார்த்திக் இசையில் உருவாகியுள்ள 'அங்காரகன்' என்கிற படத்தில் சத்யராஜ் மற்றும் மலையாள நடிகை நியா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் ஸ்ரீபதி.

'என் இனிய தனிமையே' படம் மூலம் சகு பாண்டியன் இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்.

இந்த படம் சமூகத்திற்கு தேவையான ஒரு கனமான செய்தியுடன் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது என்கின்றனர் படக் குழுவினர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, வரும் 2023 கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கர்பச்சான் படங்களில் பணியாற்றிய சிவபாஸ்கரன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை இசையமைத்துள்ளார்.

சிபி ஸ்ரீனிவாசன் ஒரு லவ் பீட் பாடலைப் பாடியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி இதயத்தை உருக வைக்கும் அம்மா சென்டிமென்ட் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பாடல் ஜனவரி, 26 ஆம் தேதி வெளியானது.

logo
Kalki Online
kalkionline.com