என்கவுண்டர், அம்பானி வீட்டு கல்யாணம்... கூலாக பதில் அளித்த ரஜினிகாந்த்!

Rajinikanth
Rajinikanth
Updated on

தமிழகத்தின் சட்ட ஒழுங்கு மற்றும் என்கவுன்ட்டர் குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ம் தேதி மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேரை கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் தப்பிக்க முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சொல்லப்படுகிறது.

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12ம் தேதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு இந்திய தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கலக்கலாக நடனமாடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. தமிழ் சினிமாவில் இருந்து நயன்தாரா - விக்கி தம்பதி, சூர்யா - ஜோதிகா, ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி குடும்பத்தினர் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.

இதையும் படியுங்கள்:
செல்ல 3வது மகனுக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்... என்ன பெயர் தெரியுமா?
Rajinikanth

மும்பையில் நடைபெற்ற, திருமணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பிய நிலையில், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கமல் நடித்துள்ள இந்தியன் 2 படத்தை இன்று பார்க்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், தமிழகத்தில் நடந்த என்கவுண்டர் குறித்தும், சட்ட ஒழுங்கு குறித்தும் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் சொல்லாமல் நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டு சென்றார்.

logo
Kalki Online
kalkionline.com