ஃபஹத் ஃபாசில் நடிக்கும் அடுத்தடுத்த இரண்டுப் படங்கள்…பாகுபலி கூட்டணியுடன் கைக்கோர்க்கிறாரா?

Fahadh Fasil
Fahadh Fasil

ஃபஹத் ஃபாசில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்த இரண்டு படங்களில்  முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து அவர் பாகுபலி கூட்டணியுடன் இணையவுள்ளது அதிகாரப்பூர்வமானது.

பிரேமலு படத்தின் முக்கிய தயாரிப்பாளர்களுள் ஒருவரான ஃபஹத் ஃபாசில் 'ஆக்சிஜன்' மற்றும் 'டோண்ட் டிரபுல் த டிரபுள்' என்ற இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் சித்தார்த் நாதெல்லா இயக்கும் ஆக்சிஜன் படம் ஒரு ஊக்கமளிக்கும் நட்பைப் பற்றிய கதைக்களத்தைக் கொண்டது. இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவை வேத வியாஸ் கோட்டிபட்டி மற்றும் படத்தொகுப்பை நிரஞ்சன் தேவர்மனே செய்கிறார்.

அதேபோல் அறிமுக இயக்குனர் ஷான்ஷங்க் யெலேட்டி இயக்கும் டோண்ட் டிரபுள் த டிரபுள் படம் ஒரு விறுவிறுப்பான ஃபாண்டஸி கதையாகும். ஆக்சிஜன் படத்தை ஒளிப்பதிவு செய்யவுள்ளது ப்ராட் ஃப்ரான்சிஸ் மற்றும் படத்தொகுப்பு செய்வது ப்ரவீன் அந்தோனி ஆகும்.

இதனையடுத்து இந்த இரண்டு படங்களுக்கான ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகின. இதன்மூலம் ஃபஹத் ஃபாசில் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் நடிக்கவுள்ளதற்கான அறிவிப்பும் வெளியானது. இரண்டு படங்களுக்குமே கால பைரவா இசையமைக்கவுள்ளார். அதேபோல் இரண்டு படங்களுமே பான் இந்தியா படங்களாக எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த இரண்டு படங்களையும் பாகுபலி படங்களைத் தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் தயாரிக்கவுள்ளது. மேலும் இணைத்தயாரிப்பாளராக எஸ்.எஸ்.கார்த்திகேயா தயாரிக்கவுள்ளார்.

பிரபல தெலுங்கு இயகுனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் தான் எஸ்.எஸ்.கார்த்திகேயா. இவர் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ப்ரேமலு படத்தை தெலுங்கில் விநியோகம் செய்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். தற்போது அந்தப் படத்தின் வெற்றியையடுத்து தயாரிப்பாளராகக் களமிறங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி தற்போது ஃபஹத் ஃபாசில் நடிக்கும் இரண்டுப் படங்களுக்கும் இணைத் தயாரிப்பாளராக படத் தயாரிப்பில் களமிறங்கிவுள்ளார்.

இதையும் படியுங்கள்:
அனல் பறக்கும் கங்குவா டீசர்.. எப்படி இருக்கு தெரியுமா?
Fahadh Fasil

இரண்டு அறிமுக இயக்குனர்களை நம்பி பான் இந்தியா படங்களை உருவாக்க பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் முன் வருவது ஆச்சர்யம்தான். அதேபோல் இரண்டிற்குமே ஃபஹத் ஃபாசில் நடிக்க ஒப்புக்கொண்டது அதைவிடவும் ஆச்சர்யம்தான். தமிழில் வடிவேலுடன் மாரீசன் படத்தில் நடித்துவரும் ஃபஹத் ஃபாசில் தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களைக் கொடுக்கத் தயாராகிவிட்டார் என்றே கூற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com