அனல் பறக்கும் கங்குவா டீசர்.. எப்படி இருக்கு தெரியுமா?

kanguva teaser
kanguva teaser
Updated on

கங்குவா படத்தின் டீசர் வெளியாகி சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். மும்பை, கொடைக்கானல், ஹைதராபாத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நடந்து முடிந்தன. தொடர்ந்து சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி ஃபிலிம் சிட்டியின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன.

இதில், சில மாதங்களுக்கு முன்பு, சூர்யாவின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, 10 அடி உயரத்தில் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ரோப் கேமிரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவர், மறுநாளே விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் தற்போது தனது கங்குவா படத்தின் பகுதி ஷூட்டிங்கை நிறைவு செய்ததாக சமீபத்தில் சூர்யா அறிவித்திருந்தார். இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கும் நிலையில், படத்தின் டீசர் இன்று மாஸாக வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
சமந்தா நடித்த Citadel Honey Bunny சீரிஸ்... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
kanguva teaser

டீசர் எப்படி இருக்கு?

ஆயிரத்தில் ஒருவன் படத்தை போன்றே பலரின் கதறல் சத்தத்துடன் துவங்குகிறது டீசர். குதிரை படை, போர், தீ, ரத்தம் என தெறிக்கவிடும் காட்சிகளால் மெய்சிலிர்க்கிறது. வில்லன் கதாபாத்திரத்தில் அசத்திய நடிகர் பெருமாச்சி என கத்தி கூச்சலிடுகிறார். தொடர்ந்து சூர்யாவும், வில்லனும் ஒருவரையொருவர் கத்தி கொண்டே நெருங்கி பார்க்கின்றனர். பலரையும் மெய்சிலிர்க்க வைத்த இந்த காட்சிகள் படமாக எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com