வெளியானது ஃபஹத் பாசிலின் 'ஆவேஷம்' படத்தின் டீசர்!

Fahadh faasil
Fahadh faasilReddit

ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகி வரும் மலையாளப் படமான 'ஆவேஷம்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனையடுத்து X தளத்தில் ஃபஹத் ஃபாசில் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான 'ரோமஞ்சம்' திரைப்படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன்தான் ஆவேஷம் படத்தையும் இயக்கியுள்ளார். ரோமஞ்சம் திரைப்படம் கேரளாவில் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜித்து மாதவன் தனது முதல் படத்திலேயே வசூல் ரீதியாகவும் வெற்றிக்கண்டார். இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது ஆவேஷம் படத்தின் டீசர் வெளியாகிவுள்ளது. சரியாக ஒரு ஆண்டு கழித்து ஜித்து மாதவன் அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார். இந்த ஆவேஷம் படத்தில் மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை நஸ்ரியா நசீம் மற்றும் அன்வர் ரஷீத் எண்டர்டெயன்மென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் டீசரில் ஃபஹத் பாசிலின் பில்டப் காட்சிகளை நகைச்சுவையாக எடுத்துள்ளனர். மூன்று இளைஞர்களின் கேள்விகள் மூலம் கதை நகரும் என்று டீசர் மூலம் கணிக்கப்படுகிறது. ஃபஹத் நகைச்சுவைக் கலந்த ஒரு டெரரான கேங்ஸ்டராக நடித்துள்ளார். ரெங்கா என்ற கதாப்பாத்திரத்தில் ஃபஹத் மிரட்டியிருக்கிறார் என்றே கூற வேண்டும்.

ஃபஹத் ஃபாசிலின் நடிப்புத் திறமை சமீபக்காலமாகத்தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஃபஹத் சினிமாவில் 2002ம் ஆண்டு ஒரு மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானார் . அதன்பின்னர் 2017ம் ஆண்டுத்தான் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் கும்பலாங்கி நைட்ஸ், சூப்பர் டீலக்ஸ், புஸ்பா, விக்ரம், மாமன்னன், பாச்சுவும் அத்புத விளக்கும் போன்ற படங்களின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். விக்ரம், மாமன்னன் படங்களின் மூலம் தனது தனித்துவமான நடிப்பினால் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

இதையும் படியுங்கள்:
மாமன்னனை தொடர்ந்து மாரீசன்.. வடிவேலு - பகத் பாசில் கூட்டணியில் அடுத்த படம் இதுதான்!
Fahadh faasil

இதன்பின்னர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான ஒவ்வொரு படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் எதிர்பார்ப்புகளும் கூடியது. இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் வடிவேலுடன் இணைந்து நடிக்கப் போகும் மாரீசன் என்ற தமிழ் படத்தின் அப்டேட் வெளியானது. இதனையடுத்து இப்போது ஜித்து இயக்கிய மலையாள படத்தின் அப்டேட் வெளியானதால் ஃபஹத்தின் ரசிகர்கள் உற்சாக மழையில் உள்ளனர் என்றே கூற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com