ஐஸ்வர்யா ராஜேஷ்யின் 'ஃபர்ஹானா' திரைப்படம்!

ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி' மற்றும் 'கைதி' போன்ற பிளாக்பஸ்டர்களை படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பேனரில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ள படம் 'ஃபர்ஹானா'. 'ஒரு நாள் கூத்து' மற்றும் 'மான்ஸ்டர்' புகழ் நெல்சன் வெங்கடேசன் இயக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஃபர்ஹானா திரைப்படம்
ஃபர்ஹானா திரைப்படம்

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘மான்ஸ்டர்’, ‘ராட்சசி’ போன்ற படங்களில் காட்சியமைத்த கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை நடிக்காத கேரக்டரில் நடித்திருக்கிறார். ‘ஃபர்ஹானா’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் இந்த மாதம் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com