
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை தேவயானி. 1990-ம் ஆண்டு இறுதியில், தமிழ் சினிமாவுல் தவிர்க்க முடியாத ஹீரோயினா இருந்த தேவயானி, 1993-ல் ‘ஷாத் பஞ்சோமி’ என்ற பெங்காலி படத்தின் மூலம் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் 1995-ல் ‘தொட்டாச்சிணுங்கி’ படம் மூலமாக தமிழ் திரைப்பட உலகில் கால் பதித்தார். அந்த படம் தோல்வியடைந்த நிலையில் அதனை தொடர்ந்து நடித்த 'கல்லூரி வாசல்' படமும் அவருக்கு ஹிட் ஆகாததால், இந்த முறையும் தமிழ் மக்கள்கிட்ட தேவயானிக்கு உரிய ரீச் கிடைக்கல. 1996-ல் 2-வது முறையாக அஜித்கு ஜோடியாக நடித்த 'காதல் கோட்டை' படம் பெரிய அளவில் ஹிட்டாகி நடிகை தேவயானியைத் தமிழ் மக்கள் தங்கள் வீட்டுப் பொண்ணா வாரி அணைச்சுக்கிட்டாங்கன்னுதான் சொல்லணும்.
அதன் பின்னர் அவர் நடித்த 'பூமணி', 'சூர்யவம்சம்', 'மறுமலர்ச்சி', ‘தொடரும்’ ‘நீ வருவாய் என’, 'மூவேந்தர்', 'பாட்டாளி', 'சமஸ்தானம்', 'ஒருவன்', 'தென்காசிப்பட்டணம் போன்ற பல படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
இயக்குநர் ராஜகுமாரனை காதலித்த நடிகை தேவயானி பெற்றோரின் எதிர்ப்பை மீறி தன் வீட்டை விட்டு வெளியேறி 2001-ம் வருஷம், ராஜகுமாரனை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இவங்களுக்கு இனியா, பிரியங்கானு க்யூட்டான இரண்டு மகள்கள் உள்ளனர்.
நடிகை தேவயானி சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் ஜொலித்தார். கோலங்கள் நாடகம் இவருக்கு பெரும் திருப்புமுனையான அமைந்தது. ‘தித்திக்கும் தேவயானி, இனி தினந்தோறும் தேவைதான் நீ' என்று ரசிகர்களை ஈர்த்த தேவயானி அவ்வப்போது படங்களில் தலைகாட்டி வருகிறார்.
அதுமட்டுமின்றி நடிகை தேவயானி முதன்முறையாகத் தயாரித்து, ‘கைக்குட்டை ராணி’ என்ற குறும்படத்தையும் இயக்கினார். இக்குறும்படம், 17-வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்துக்கான விருதை வென்றது.
இதற்கிடையில் சினிமாவில் வர துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு தேவயானி அறிவுரை வழங்கியிருக்கிறார். அவர் கூறும்போது,
“சினிமாவில் முன்னேற ஒரே வழி கடின உழைப்பு தான். இங்கு யாரும், யாரையும் ஏற்றிவிட முடியாது. வளர்த்துவிடவும் முடியாது. நமக்குள்ள தன்னம்பிக்கை தான் நம்மை ஜெயிக்க வைக்கும்.
இலக்கு நோக்கி நாம் போய்க்கொண்டு இருக்கவேண்டும். வழிகாட்ட வேண்டுமானால் பெற்றோர் இருப்பார்கள். ஆனால் அந்த வழியில் உழைப்பை கொட்டி நாம்தான் முன்னேற வேண்டும்.
சினிமா ஒரு கடினமான துறை. இங்கு எல்லோரும் சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கப்படுவது கிடையாது. இங்கு நிறைய சிக்கல்கள், சோதனைகள் உண்டு.
கஷ்டங்களை நினைத்து கவலைப்படாமல் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆனந்தமாகவும், கடின உழைப்புடனும் கடந்தால் வெற்றி நிச்சயம். இளைஞர்களுக்கான அறிவுரையாகவே இதனை சொல்லிக்கொள்கிறேன். நம் சொந்த உழைப்பு தான் நம்மை அரியணை ஏற்றும்'', என்றார்.