விமர்சனம் - 'காதல் என்பது பொதுவுடைமை' - சமுதாயம் ஏற்குமா?

Movie review
Movie review
Published on

காதல் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே தோன்றும் உணர்வு மட்டுமே என்று நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால் ஒரு ஆண் மற்றொரு ஆண் மீது வைக்கும் காதல், ஒரு பெண் மற்றொரு பெண் மீது வைக்கும் காதல் என்ற அதிகம் பேசப்படாத 'தன் பாலின ஈர்ப்பு' காதலும் உண்டு. தன்பாலின ஈர்ப்பை சட்டங்கள் அங்கீகரித்திருந்தாலும் சமுதாயம் முழுமனதுடன் ஏற்றுக் கொள்வதில்லை.

இது போன்ற சமுதாய சிக்கல் கொண்ட கதையை மையமாக வைத்து 'காதல் என்பது பொதுவுடைமை' என்ற படத்தை இயக்கி உள்ளார் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். இப்படம் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்கள் வரவேற்பை பெற்றுள்ளது. காதலர் தினத்தில் திரைக்கு வர உள்ளது.

சாம் (லிஜா மோல்), தான் ஒருவரை காதலிப்பதாக தன் அம்மாவிடம் (ரோகிணி) சொல்கிறார். அம்மா, "நீ விரும்பும் பையனை அழைத்து வா. நான் பேச வேண்டும்" என்கிறார். சாம் ஒருநாள் ஒரு பெண்ணை அழைத்து வந்து "இவள் பெயர் நந்தினி. நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். இவள் இனிமேல் இந்த வீட்டில் தான் இருப்பாள்," என்கிறார்.

இதனால் கோபம் கொள்ளும் அம்மா, "இது இயற்கைக்கு முரண். ஏற்று கொள்ள முடியாது" என்கிறார். சாமுக்கு அறிவுரை சொல்லி திருத்த சில ஆண்டுளுக்கு முன் பிரிந்து சென்ற சாமின் அப்பாவை அழைக்கிறார். அப்பா வந்து சாம், நந்தினி இருவருக்கும் சில அறிவுரைகளை தருகிறார். இந்த அறிவுரைகளை கேட்டு நந்தினியும் சாமும் என்ன முடிவெடுத்தார்கள் என்பது 'காதல் என்பது பொதுவுடைமை' படத்தின் கதை.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கை எனும் பாதை… சரியான திசையை காட்டும் பகவத் கீதை!
Movie review

'தன் பாலின ஈர்ப்பு' என்ற சமுதாய சிக்கல் கதையை குடும்பம் என்ற தளத்தில் வைத்து நேர்த்தியாக சொல்லி இருக்கிறார் டைரக்டர் ஜெயபிரகாஷ். படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி வரை எடுத்து கொண்ட விஷயத்தை மட்டுமே சொல்லி இருக்கிறார். காதல், அன்பு, பிரிவு, ஆண் - பெண் நட்பு என பல சமூகம் சார்ந்த விஷயங்களை விவாதத்திற்கு உள்ளாக்குகிறது இப்படம். ஒரே பாலினத்தவர் மீது ஏற்படும் காதலையும் சிறிது consider செய்யுங்கள் என்கிறது.

'ஜெய் பீம்' படத்திற்கு பிறகு லிஜோ மோல் தன் திறமையை முழுவதும் வெளி காட்டி நடித்துள்ளார். தன் மீது எந்த தவறும் இல்லை என புரிய வைக்க கதறி அழும் காட்சியில் நமக்கே கண்ணீர் வந்து விடுகிறது. இந்த சிக்கலை ஒரு சராசரி அம்மா எப்படி எதிர் கொள்வார் என லைவ் கேரக்டராக வாழ்ந்து காட்டி உள்ளார் ரோகிணி.

இதையும் படியுங்கள்:
காதலர் தின கிஃப்ட் - இந்த 7 பொருட்களை மட்டும் தவறியும் கொடுத்துடாதீங்க... உறவே சிக்கலாகி விடும்!
Movie review

அன்பான அம்மா, கோபக்கார அம்மா, பரிதவிக்கும் அம்மா என இன்றைய அம்மாகளின் மொத்த உருவத்தையும் கண் முன் கொண்டு வருகிறார். அப்பாவாக வரும் வினித் மிக சரியான தேர்வு. தன் மகளுக்கு யதார்த்தத்தை புரிய வைக்கும் போதும், தன் மகளை இந்த விஷயத்தில் மீட்டெக்க வேண்டுமே என்று பேசும் போதும் வினித் கம் பேக் என்று சொல்லத் தோன்றுகிறது.

கண்ணன் நாராயணன் இசையும், டேனி சார்லஸ் பட தொகுப்பும் இந்த கதையை , கவிதை போல நகர்த்தி செல்கின்றன. எந்தவித ஆபாசம் இல்லாமல் சென்சிடிவான கதையை தந்து ஆடியன்ஸை யோசிக்க வைத்திருக்கிறார் டைரக்டர். நீங்கள் ஒரு மாற்று சினிமாவை விரும்பினால் இப்படம் உங்களுக்கு பிடிக்கும். தன் பாலின ஈர்பாளர்களை ஏற்று கொள்ள விட்டாலும் பரவாயில்லை, மனிதர்களாக நடத்துங்கள் என்கிறது 'காதல் என்பது பொதுவுடைமை'.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com