காதலர் தின கிஃப்ட் - இந்த 7 பொருட்களை மட்டும் தவறியும் கொடுத்துடாதீங்க... உறவே சிக்கலாகி விடும்!

Bad Gift
Bad Gift
Published on

நாளை காதலர் தினம்.

காதலர் தினம் என்றாலே காதலை வெளிப்படுத்தவும், அன்பின் ஆழத்தை சொல்லிவிட தன்னுடைய பார்ட்னருக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கவும் தான் அனைவரும் நினைப்பார்கள். பார்ட்னரின் மனதை கவரும் வகையிலான பொருட்களைப் பரிசாக அளிக்க வேண்டும் என நினைப்போம். ஆனால் இதில் கவனம் செலுத்தாவிட்டால் உறவே சிக்கலாகி விடுமாம்.

காதலர் தினத்திற்கு எப்படிப்பட்ட பொருட்களைப் பரிசாக வாங்கிக் கொடுக்க வேண்டும், எந்த மாதிரியான பொருட்களைக் கண்டிப்பாக வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கு வாஸ்து சாஸ்திரம் வழி காட்டுகிறது. குறிப்பிட்ட 7 பொருட்களை மட்டும் மறந்தும் உங்களின் காதல் துணைக்கு வாங்கிக் கொடுக்கக் கூடாது என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. அப்படி வாங்கிக் கொடுத்தால் உங்களின் காதல் உறவில் விரிசல் அல்லது விட்டு பிரியும் நிலை கூட ஏற்பட்டு விடும் எனச் சொல்லப்படுகிறது.

குறிப்பிட்ட இந்த 7 பொருட்களும் துரதிஷ்டத்தை ஈர்க்கக் கூடியவையாகும். அதனால் மறந்தும் இந்தப் பொருட்களைப் பரிசளிப்பதை தவிர்த்து விடுங்கள்.

காதலர் தினத்தில் பரிசளிக்கக் கூடாத 7 பொருட்கள் :

1. முள் செடிகள்:

முட்கள் நிறைந்த செடிகள், வறண்ட நில செடிகள் போன்ற செடிகளை ஒரு போதும் உங்களின் காதல் துணைக்குப் பரிசாக வாங்கிக் கொடுத்து விடாதீர்கள். இதனால் உங்களின் காதல் உறவு பாதிக்கப்படலாம். இந்தச் செடிகள் எதிர்மறை சக்திகளை அதிகம் ஈர்க்கும் தன்மையைக் கொண்டவை என்பதால் உங்களுக்கு உங்கள் பார்டனருக்கும் இடையே சண்டை, சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்குப் பதிலாக நேர்மறை சக்திகளை ஈர்த்து அன்பு, ஒற்றுமையை அதிகரிக்க ரோஜாக்கள் போன்ற செடிகளை வாங்கிப் பரிசாகக் கொடுக்கலாம்.

2. கருப்பு நிற பொருட்கள்:

உடைகள், தினசரி உபயோகப் பொருட்கள் அல்லது வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள் எனக் கருப்பு நிறத்தில் இருக்கும் எந்தப் பொருட்களையும் வாங்கி உங்கள் பார்ட்னருக்கு பரிசாக அளிக்க வேண்டாம். கருப்பு நிற பொருட்கள் எதிர்மறை சக்திகளை ஈர்க்கக் கூடியவை. இவைகள் துன்பம், பிரிவு ஆகிய விளைவுகளையே ஏற்படுத்தும். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பிரிவதற்கும் இது காரணமாகி விடும். அதனால் சிவப்பு, பிங்க், மஞ்சள் போன்ற காதலை வளர்க்கும், அன்புக்குரிய நிறங்களால் ஆன பொருட்களை வாங்கிக் கொடுப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
Valentine’s day special: உங்கள் காதலனுக்கான Best Love Quotes!
Bad Gift

3. கூர்மையான பொருட்கள்:

கத்தி போன்ற கூர்மையான பொருட்களை ஒரு போதும் உங்க பார்ட்னருக்கு பரிசாகக் கொடுத்து விடாதீர்கள். இது உங்கள் உறவை கெடுப்பதுடன், பிரிவையும் ஏற்படுத்தி விடும். கூர்மையான பொருட்கள் எப்போதும் நெகடிவ் விஷயங்களை ஈர்க்கக் கூடியவை என்பதால் வாக்குவாதங்கள், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் போன்ற விஷயங்களை நடக்க வாய்ப்புள்ளது. இதற்கு மாறாக ஒற்றுமையை அதிகப்படுத்தும் வகையிலும், இணை பிரியாது இருப்பதற்காகவும் நகைகள் போன்ற பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அல்லது அவர்களுக்குப் பொழுதுபோக்க பயன்படும் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

4. பழைய பொருட்கள்:

பழைய அல்லது ஏற்கனவே வேறு ஒருவர் பயன்படுத்திப் பொருட்களை ஒரு போதும் பரிசாக அளிக்காதீர்கள். இது உங்கள் உறவு அடுத்த நிலைக்குச் செல்வதைத் தடுத்து விடும். உறவில் வளர்ச்சி என்பதே இல்லாமல் போய் விடும். அதற்குப் பதிலாகப் புதிய துவக்கத்தை ஏற்படுத்த, ஒளிமயமான எதிர்காலம் அமையும் கையிலான புதிய பொருட்களைப் பரிசாக வாங்கிக் கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
காதல் ஒரு காட்டாறு… தெரிஞ்சுக்கோங்க இந்த மேட்டரு!
Bad Gift

5. துரதிஷ்டமான எண்கள்:

துரதிஷ்டமான எண்கள் எனச் சொல்லப்படும் 4, 8 போன்ற எண்கள் இருக்கும் பொருட்களை வாங்கிக் கொடுப்பதைத் தவிருங்கள். இது துரதிஷ்டத்தைக் கொண்டு வந்து விடும். இதற்கு மாறாக அதிர்ஷ்டம் தரும் வகையிலான 1, 3 அல்லது 6 ஆகிய எண்களைக் கொண்ட பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தால் பாசிடிவிட்டி மற்றும் நல்ல எதிர்காலம் அமையும்.

6. பிரிவுடன் தொடர்புடைய பொருட்கள்:

ஒற்றை ரோஜா, ஒற்றைப் போட்டோ ஃபிரேம் போன்றவை தனிமையை, பிரிவை குறிக்கும் பொருட்கள். இது போன்ற பொருட்களை எப்போதும் பார்ட்னருக்கு வாங்கிக் கொடுத்து விடாதீர்கள். இதற்குப் பதில் இணை பிரியாமல் இருப்பது, இனிமையான நினைவுகளைத் தரும் ஆல்பம், ஜோடியாக இருக்கும் வாட்ச் போன்றவற்றை வாங்கிப் பரிசாகக் கொடுக்கலாம்.

7. மோசமான உலோகங்கள்:

இரும்பு, ஸ்டீல் போன்ற மோசமான விளைவுகளைத் தரும் உலோகங்களால் ஆன பொருட்களைப் பரிசாக வழங்கக் கூடாது. இந்த உலோகங்கள் தீமையை அதிகம் ஈர்க்கக் கூடியவை. இதற்குப் பதிலாகச் செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற நன்மைகளை அதிகம் ஈர்க்கும் பொருட்களை வாங்கிக் கொடுப்பதால் உறவு பலப்படும்.

என்ன வாசகர்களே! காதலியை இர்க்க அவர்களுக்கு நல்ல பரிசு கொடுத்து காதலர் தினத்தை செமையா கொண்டாடுங்க .

All the Best.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com