மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் தக் லைஃப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் மற்றும் கமல்ஹாசனும் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு தக் லைஃப் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெட்சுமி, அசோக் செல்வன், அபிராமி, வடிவுக்கரசி, அலி ஃபைசல், சன்யா மல்ஹோத்ரா என பலரும் நடித்திருக்கின்றனர்.
துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்கவுள்ளதாக சென்ற ஆண்டே செய்திகள் வந்தன. ஆனால் இருவரும் வெளியேறிவிட்டார்கள். பிறகு சிம்பு இப்படத்தில் இணைந்தார். ஜுன் 5ஆம் தேடதி படம் வெளியாகவுள்ளது.
கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். சென்னை, கோவா உள்பட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் முதல் பாடல் வெளியீட்டையே பிரம்மாண்டமான விழாவாக நடத்தியுள்ளனர் படக்குழுவினர்.
இப்படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில், பாடலின் லிரிக் வீடியோவில் சன்யா மல்ஹோத்ரா தான் முழுக்க நடனமாடியுள்ளார். மேலும் லப்பர் பந்து புகழ் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மணப்பெண்ணாக உள்ளார். அவரின் திருமணத்தில் வரும் பாடலாக இது அமைந்திருக்கிறது.
’ஜிங்குச்சா’ என பெய்ரிடப்பட்டுள்ள இந்த பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். சக்திஸ்ரீ கோபாலன், வைஷாலி மற்றும் ஆதித்யா ஆர்.கே ஆகியோர் பாடியுள்ளனர். இந்த வீடியோவின் இறுதியில் கமல் மற்றும் சிம்பு ஆகியோர் இணைந்து நடனமாடுகிறார்கள்.
மணிரத்னம் இதுபோன்ற திருமணம் விழாக்களில் நடனமாடும் பாடல்கள் ஏற்கனவே எடுத்திருக்கிறார். யாரோ யாரோடி, சரட்டு வண்டியில் போன்ற பாடல்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
மேலும் இந்த லிரிக்கல் வீடியோவில் குடும்பமாக விசேஷத்தை நடத்துவதைப் பார்த்தால், நிச்சயம் இது ஒரு குடும்ப ஆக்ஷன் படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
திருமண விழாக்களில் ஒலிக்க தமிழில் ஏராளமான பாடல்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது இந்த பாடலும் இணைந்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.