தூசி தட்டப்படும் பழைய காவியங்கள்: இது வியாபார தந்திரமா? அல்லது தரமான கதைகளின் தேவையா?

Sivaji Ganesan
Sivaji Ganesan
Published on

தற்சமயம் தமிழ்த்திரையுலகில் ரீ-ரிலீஸ் மோகம் அதிகரித்துள்ளது.எம்.ஜி.ஆர். அவர்களின் 'ஆயிரத்தில் ஒருவன், இதயக்கனி,நடிகர் திலகத்தின் கர்ணன், போன்ற படங்கள் மறு வெளியீட்டில் பெரிய வெற்றிகளை கண்டன. ரஜினியின் 'பாபா', படையப்பா. அஜித்தின் 'மங்காத்தா' உள்ளிட்ட படங்கள் வெளிவந்தன. பல படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.டி. ஆர். ரும் தன் பங்குக்கு 'உயிருள்ளவரை உஷா' படத்தை வெளியிட இருக்கிறார்.

இந்த ரீ ரிலீசும் புதிது அல்ல. இசைஞானி அறிமுகமான 'அன்னக்கிளி' திரைப்படம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்தது. முதல் இரண்டு வாரம் படம் சரியாக போகாத காரணத்தால் பல ஊர்களில் படத்தை எடுத்து விட்டார்கள். மச்சான பாத்தீங்களா, பயங்கரமாக ஹிட்டானது..கூடவே மற்ற பாடல்களும் ஹிட்டானது. ஒவ்வொரு டீக்கடையிலும் படத்தின் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. ரெக்கார்ட் விற்பனை அதிகமானது. அடுத்த சில நாட்களில் அந்தப் படம் அதே ஊர்களில் வேறு வேறு திரையரங்குகளிலும் சில இடங்களில் அதே திரையரங்குகளில் மறு வெளியீடானது.அதாவது 'ரீ ரிலீஸ்' ஆகி சக்கைப்போடு போட்டது. மறு வெளியீட்டில் "மச்சான பாத்தீங்களா" என்பதை பெரிதாக போட்டு படத்தின் பெயரான 'அன்னக்கிளி' யை சின்னதாக போட்டு போஸ்டர் விளம்பரம் செய்தார்கள். கைமேல் பலன். பெண்கள் கூட்டம் அலைமோதியது.

கருப்பு வெள்ளையில் வெளிவந்த சின்ன பட்ஜெட் படம்.வெள்ளி விழா கொண்டாடியது. இளையராஜா என்ற ஜாம்பவான் மக்கள் மனங்களில் ஆட்சியை பிடித்து இன்று வரையில் ஆண்டுகொண்டிருக்கிறார். கதாசிரியர் ஆர்.செல்வராஜ், இயக்குனர்கள் தேவராஜ்-மோகன் ஆகியோர்களுக்கு நல்ல பெயர்.பஞ்சு அருணாசலம் அவர்கள் தயாரித்த படம் இது.

நடிகர் திலகத்தின் வெற்றிப் படங்களில் ஒன்று 'வசந்த மாளிகை'. மதுவுக்கு அடிமையான ஜமீன் குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞன் ஒரு பெண்ணால் எப்படி மாறுகிறான், தன் காதலிக்காக வசந்த மாளிகை ஒன்றை கட்டுகிறான், அவன் காதல் என்ன ஆகிறது என்பதுதான் கதை. பிரேம் நகர் என்ற தெலுங்கு படத்தின் தமிழாக்கம் இது. கிளைமாக்ஸ் காட்சியில் காதலி தன்னை விட்டுப் பிரிந்ததால் நடிகர் திலகம் விஷம் அருந்தி உயிருக்கு போராடி காப்பாற்றப்பட்டு காதலியோடு மீண்டும் இணைவது போல முடித்திருப்பார்கள். மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம். ஆனால் கேரளாவில் வெளியான படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் காதல்

தோல்வியால் விஷம் குடித்த காதலன் இறந்து போவது போல சோகமாக முடித்திருப்பார்கள்.அங்கும் இந்த படம் வெற்றி பெற்றது. 1972 ல் வெளியான இந்த படம் 80 களின் ஆரம்பத்தில் கேரளாவில் வெளியான பிரிண்ட்களோடு மீண்டும் ரிலீசானது...'காதலுக்காக சிவாஜி உயிரை துறக்கும் கிளைமாக்ஸ் என்ற அறிவிப்போடு.

எதுவும் இங்கு புதிதில்லை. பழசை தூசி தட்டி மெருகேற்று கிறார்கள். புதுமைப்பித்தன் அவர்களின் 'சிற்றன்னை'(உதிரிப்பூக்கள்)..லட்சுமி அவர்களின் 'பெண் மனம்'(இருவர் உள்ளம்) மகரிஷி அவர்களின் 'பத்ரகாளி' அனுராதா ரமணன் அவர்களின் 'சிறை'... இது போன்ற சிறந்த கதைகளை தேடிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பது தான் இப்போதைய தேவை.

INSTEAD OF RE RELEASE..RETHINK...THE BEST OPTION.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: Even If This Love Disappears From The World Tonight (2025) - கொரியன் ரொமான்டிக் டிராமா!
Sivaji Ganesan

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com