

கொச்சியில் உள்ள அட்லக்ஸ் கன்வென்ஷன் சென்டரில், தென்னிந்திய திரைப்படங்களுக்கான 70வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா, பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ் , தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள சினிமாவில் பலருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நட்சத்திரங்கள் , திரைத்துறையை சார்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆடுஜீவிதம் , அமரன், புஷ்பா-2 ஆகிய திரைப்படங்கள் அதிக அளவில் விருதுகளை வாங்கி குவித்தன.
தமிழ் சினிமாவில் விருது பெற்றவர்கள் விவரம்:
1.தமிழில் சிறந்த திரைப்படம் – அமரன்
2. சிறந்த படம் (விமர்சகர்கள்) - மெய்யழகன்
3.சிறந்த இயக்குனர்- ராஜ்குமார் பெரியசாமி (அமரன்) , பி.எஸ். வினோத்ராஜ் (கொட்டுக்காளி)
4. சிறந்த நடிகர் - சிவகார்த்திகேயன் (அமரன்)
5. சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) - அரவிந்த் சுவாமி (மெய்யழகன்)
6.சிறந்த நடிகை - சாய் பல்லவி (அமரன்)
7.சிறந்த நடிகை (விமர்சகர்கள்) - அன்னா பென் (கொட்டுக்காளி)
8.சிறந்த துணை நடிகர் - கார்த்தி(மெய்யழகன்)
9.சிறந்த துணை நடிகை - பார்வதி (தங்கலான்) மற்றும் ஸ்வாசிகா (லப்பர் பந்து)
10. சிறந்த இசையமைப்பாளர்- ஜீவி.பிரகாஷ் (அமரன்)
11. சிறந்த பாடலாசிரியர் - உமாதேவி , யாரு இவன் யாருக்காக (மெய்யழகன்)
12. சிறந்த பின்னணிப் பாடகர் : ஹரிசரண் , ஹே மின்னலே (அமரன்)
13.சிறந்த பின்னணிப் பாடகி : ஸ்வேதா மோகன், ஹே மின்னலே(அமரன் )
14.சிறந்த ஒளிப்பதிவு - சி.எச்.சாய் (அமரன்)
15. சிறந்த அறிமுக இயக்குனர் - சுரேஷ் மாரி (ஜே பேபி) மற்றும் தமிழரசன் பச்சமுத்து(லப்பர் பந்து)
16. சிறந்த அறிமுக நடிகர் - ஹிருது ஹாரூன் (தக்ஸ்)
17.சிறந்த அறிமுக நடிகை - ஸ்ரீ கௌரி பிரியா (லவ்வர்)
18. சிறந்த நடிப்பு - விக்ரம் (தங்கலான்)
தமிழில் அதிகபட்சமாக அமரன் திரைப்படம் 7 பிரிவிலும் , மெய்யழகன் 4 பிரிவிலும் விருதுகளை வென்றுள்ளது.
தெலுங்கு சினிமாவில் விருது பெற்றவர்களின் விவரம்:
1.தெலுங்கில் சிறந்த திரைப்படம் – புஷ்பா 2 தி ரூல்
2.சிறந்த இயக்குனர்- சுகுமார் (புஷ்பா 2 தி ரூல்)
3.சிறந்த நடிகர் - அல்லு அர்ஜுன் (புஷ்பா 2 தி ரூல்)
4. சிறந்த நடிகை - நிவேதா தாமஸ் (35 சின்ன கத காடு)
5. சிறந்த துணை நடிகர் - அமிதாப் பச்சன்( கல்கி 2898 AD)
6 சிறந்த துணை நடிகை அஞ்சலி -
(கேங்ஸ் ஆஃப் கோதாவரி)
7.சிறந்த நடிகை (விமர்சகர்கள்) – காஜல் அகர்வால் (சத்யபாமா)
8. சிறந்த அறிமுக நடிகை – நயன் சரிகா (கம் கம் கணேஷா)
9. சிறந்த அறிமுக நடிகர் ஆண் –சந்தீப் சரோஜ் (கமிட்டி குரோல்லு)
10. சிறந்த இசை ஆல்பம் – தேவி ஸ்ரீ பிரசாத் (புஷ்பா 2: தி ரூல்)
11.சிறந்த பின்னணிப் பாடகி - ஷில்பா ராவ், சுட்டமல்லே, (தேவரா: பார்ட் 1)
12.சிறந்த பின்னணிப் பாடகர் - ஸ்ரீ கிருஷ்ணா , கூர்ச்சனி மாத்தடக்கி (குண்டூர் காரம்)
13.சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - நிதின் ஜிஹானி சவுத்ரி (கல்கி 2898 AD) மற்றும் ராமகிருஷ்ணா & மோனிகா (புஷ்பா 2: தி ரூல்)
14. சிறந்த நடன அமைப்பாளர் - சேகர் , கூர்ச்சனி மாத்தடக்கி, (குண்டூர் காரம்)
தெலுங்கு திரையுலகில் புஷ்பா 2: தி ரூல் 5 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளது.
மலையாள சினிமாவில் விருது பெற்றவர்களின் விவரம்:
1.சிறந்த திரைப்படம் – மஞ்சும்மெல் பாய்ஸ்
2.சிறந்த இயக்குனர் – ராகுல் சதாசிவன் (பிரம்மயுகம்)
3.சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள்) –
உள்ளொழுக்கு மற்றும் கிஷ்கிந்தா காண்டம்
4.சிறந்த நடிகர் –மம்மூட்டி (பிரம்மயுகம்)
5. சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) –பிருதிவிராஜ் சுகுமாரன்(ஆடுஜீவிதம்) , ஆசிப் அலி (கிஷ்கிந்தா காண்டம்)
6.சிறந்த நடிகை : ஊர்வசி (உள்ளொழுக்கு)
7.சிறந்த நடிகை (விமர்சகர்கள்): ஜரின் ஷிஹாப் (ஆட்டம்)
8.சிறந்த துணை நடிகர் – விஜயராகவன்
(கிஷ்கிந்தா காண்டம்)
9.சிறந்த துணை நடிகை – லிஜோமோல் ஜோஸ் (அவள்)
10.சிறந்த இசை ஆல்பம் – சுஷின் ஷ்யாம்(ஆவேசம்)
11.சிறந்த பாடல் வரிகள் – ரஃபீக் அகமது, பெரியோனே ரஹ்மானே (ஆடுஜீவிதம்)
12.சிறந்த பின்னணி பாடகர் –ஜித்தின் ராஜ், பெரியோனே ரஹ்மானே (ஆடுஜீவிதம்)
13.சிறந்த பின்னணிப் பாடகி –வைக்கம் விஜயலட்சுமி , அங்கு வான கோணிலு (ARM)
14.சிறந்த ஒளிப்பதிவு– ஜோஜு ஜார்ஜ் (பானி) மற்றும் ஜித்தின் லால் (ARM)
15.சிறந்த அறிமுக நடிகர் – கே.ஆர்.கோகுல்
(ஆடுஜீவிதம்) மற்றும் அபிமன்யு எஸ்.திலகன்
(மார்கோ)
16. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு– மெத்தில் தேவிகா (கத இன்னுவாரே)
17.சிறந்த ஒளிப்பதிவு– சுனில் கே.எஸ்
(ஆடுஜீவிதம்)
18. திருப்புமுனை திரைப்படத் தயாரிப்பு– ஆனந்த் ஏகர்ஷி (ஆட்டம்)
19.வாழ்நாள் சாதனையாளர் விருது– ஸ்ரீனிவாசன் மற்றும் ஸ்ரீகுமரன் தம்பி
20.சினி ஐகான் விருது –பாவனா
கன்னட சினிமாவில் விருது பெற்றவர்களின் விவரம்:
1.சிறந்த படம் – ஷகாஹாரி
2 சிறந்த இயக்குனர் – பிருத்வி கோணனூர் (ஹடினெலெந்து)
3.சிறந்த படம் (விமர்சகர்கள்) – ஸ்ரீநிதி பெங்களூரு (பிளிங்க்)
4.சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) –கௌரிசங்கர் (கெரெபெட்டே)
5.சிறந்த நடிகை (விமர்சகர்கள்) - அங்கீதா அமர் (இப்பானி தப்பிடா இலேயாலி)
6.சிறந்த நடிகை – அக்ஷதா பாண்டவபுரா
(கோலி எஸ்ரு)
7. சிறந்த நடிகர் – ஶ்ரீ முரளி (பகீரா)
8.சிறந்த துணை நடிகர் – கோபால் கிருஷ்ண தேஷ்பாண்டே (பிளிங்க்)
9. சிறந்த துணை நடிகை –ப்ரியா ஷதமர்ஷன் (பீமா)
10. சிறந்த அறிமுக நடிகர் – சமர்ஜித் லங்கேஷ் (கவுரி)
11. சிறந்த அறிமுகப் நடிகை – பிந்து சிவராம் (கெரபெட்டெ)
12.சிறந்த இசை ஆல்பம்: அர்ஜுன் ஜன்யா
(கிருஷ்ணம் பிரணயா சகி)
13.சிறந்த பாடல் வரிகள் – வி. நாகேந்திர பிரசாத், துவாபரா (கிருஷ்ணம் பிரணயா சகி)
14. சிறந்த பின்னணி பாடகர் – ஜஸ்கரன் சிங் , துவாபரா (கிருஷ்ணம் பிரணயா சகி)
15. சிறந்த பின்னணிப் பாடகி– ஸ்ருதி பிரஹலாதா , ஹிதலகா கரிப்யடா மாவா (கரடகா தமனகா)