இயக்குநர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்தில் நடித்தவர்களுக்கு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை என்று நடிகர்கள் புகார் அளித்துள்ளனர்.
கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். ஒரு பாட்டுக்கே கோடி கணக்கில் பணம் போட்டு எடுப்பவர். இவர் இயக்கிய முதல் படமான ஜெண்டில் மேன் நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இதனைத்தொடர்ந்து அவர் காதலன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார்.
சமீபத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக தோல்வியடைந்தன.
சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் படம் படு மோசமான விமர்சனத்தை பெற்றது. இது இவரின் முதல் தெலுங்கு படமாகும். இந்தப் படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் ராம்சரண் அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சுனில், அஞ்சலி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த கதை சுமார் 3 வருடங்களாக உருவாகி வந்தது. இதனாலேயே பெரிய எதிர்பார்ப்பை தாங்கி நின்றது. இப்படம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு உலக அளவில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் துரதிர்ஷ்டவசமாக பாக்ஸ் ஆபிஸில் வெறும் 150 கோடியை மட்டுமே ஈட்டியது.
இப்படியான நிலையில், இப்படத்தில் நடித்த நடிகர்கள் சிலர் தங்களுக்கு சம்பளம் தரவில்லை என்று போலீஸில் புகார் அளித்திருக்கின்றனர். இந்த படத்தில் நடித்த ஜூனியர் ஆர்டிஸ்ட்டில் ஒருவரான தருண் என்பவர் குண்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அதில் அவர், இந்த படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் சில நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தினுடைய படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் 1200 ரூபாய் சம்பளம் கொடுப்பதாக தெரிவித்து இருந்தார்கள். ஆனால், இவர்களில் இன்னும் 350 பேருக்கு படத்தில் நடித்த சம்பளமே கொடுக்கவில்லை.
எந்திரன் பட வழக்கில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்கள் சமீபத்தில் முடக்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தார்.