கோடைக்கு வந்து குவியும் நம் தேசத்து மாம்பழ வகைகள்!

Mango varieties
Mango varieties
Published on

முக்கனிகளில் ஒன்றாக சொல்லப்படும் மாம்பழத்தை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாம்பழத்தின் சுவையால் ஈர்க்கப்பட்டு அதை ரசித்து ருசிப்பதை பார்த்திருப்போம். அத்தகைய சுவை மிகுந்த  மாம்பழ சீசன் ஏப்ரல், மே மாதங்களில் தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும். மாம்பழத்தில் எத்தனை சுவைக்கொண்ட விதவிதமான பழங்கள் இருக்கின்றன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. Dasheri mango.

தாஷேரி மாம்பழங்கள் அதன் மணத்திற்கும், இனிப்பு சுவைக்கும் பெயர் போன மாம்பழமாகும். இந்தியாவில் உத்திரபிரதேசத்தில் உள்ள மலிஹாபாத்தில் அதிகமாக விளைகிறது. இந்த வகை மாம்பழத்தில் அதிக சதைப்பற்று இருப்பதால் ஜூஸ் போடுவதற்கு ஏற்றதாகும்.

2. Kesar mango.

கேசர் மாம்பழம் குங்குமப்பூ போன்ற நறுமணத்தையும் இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளைக் கொண்டது. இது நார்ச்சத்துகள் அதிகம் இருக்கிறது. இந்த வகை மாம்பழம் குஜராத் பகுதிகளில் அதிகமாக விளைகிறது.

3. Totapuri mango.

இந்த வகை மாம்பழம் பார்ப்பதற்கு கிளியின் முக்கைப்போல இருக்கும். இது நீண்டு, வளைந்து காணப்படும். இந்த மாம்பழம் சற்று கசப்புத்தன்மையைக் கொண்டதால் ஜூஸ், ஊறுகாய், சட்னி போன்றவை செய்ய பயன்படுத்துகின்றனர். ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டில் இந்த வகை மாம்பழம் அதிகம் விளைகிறது.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் மஷ்ரூம் பெப்பர் மசாலா - கேரட் சட்னி 'க்விக்கா' செய்யலாம் வாங்க!
Mango varieties

4. Langra mango

இந்த மாம்பழத்தில் இனிப்பு சுவை மற்றும் சிட்ரஸ் பழங்களில் இருக்கும் புளிப்பு சுவையும் சேர்ந்து இருக்கும். பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களை கொண்ட இந்த மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இந்த மாம்பழம் உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் அதிகம் விளைகிறது.

5. Himsagar mango.

மேற்கு வங்காளத்தில் அதிகம் விளையக்கூடிய ஹிம்சாகர் மாம்பழம் நிறைய சதைப்பற்றை கொண்டிருக்கும். இந்த மாம்பழம் இதனுடைய தனித்துவமான சுவைக்கும், மணத்திற்கும் பெயர் போனதாகும். இந்த மாம்பழம் மிகவும் மென்மையாகவும், கூழ் போன்ற சதையையும் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
ஜலதோஷம் பிடித்து விட்டால் மூக்கை மென்மையாக சிந்துங்கள்… ஜாக்கிரதை!
Mango varieties

6.Malgova mango.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட மல்கோவா மாம்பழம் கூழ் போன்ற சதைப்பற்றை உடையது. இந்த மாம்பழம் பார்க்க சற்று பெரிதாக இருந்தாலும், நல்ல இனிப்பு சுவையைக் கொண்டது. அதனால் இந்த மாம்பழத்தை இனிப்பான உணவுகள் செய்யவும், மில்க்ஷேக் போன்ற குளிர்பானம் செய்யவும் அதிகமாக பயன்படுத்துவார்கள். இந்த மாம்பழங்களில் கோடையை குதுகலமாக்க நீங்கள் எந்த மாம்பழத்தை வாங்க போகிறீர்கள் என்று சொல்லுங்க பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com