மாஸ் வெற்றி பெற்ற சூரி கருடன்... ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது?

Garudan
Garudan

சூரியின் கருடன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பிறகு ஓடிடி ஆதிக்கம் அதிகரித்து வருவதால் பலரும் ஓடிடி ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் திரையரங்கில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வெற்றியை பெற்றது. அதில் ஒரு படம் தான் சூரியின் கருடன்.

நகைச்சுவை நடிகராக இருந்த சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் தயாரான விடுதலை 1 படத்தில் ஹீரோவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வரும் நிலையில், கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்தின் கொட்டுக்காளி படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நிவின் பாலியுடன் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். இந்த ஏழு கடல் ஏழு மலை மற்றும் விடுதலை 2 படங்கள் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படங்கள் தவிர வெற்றிமாறன் எழுதி, துரை செந்தில்குமார் இயக்கி வரும் கருடன் படத்தில் சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோருடன் சேர்ந்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விடுதலை படத்தையும் தாண்டி ஆக்சன் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார். இதுவரை சூரியை இப்படி பார்த்ததே இல்லையென ரசிகர்கள் கமெண்ட்டுகளை தட்டி வருகின்றனர். மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார் நடிகர் சூரி.

இதையும் படியுங்கள்:
விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்.. பற்றி எரிந்த தீயால் பதற்றம்!
Garudan

திரையரங்கில் சக்கப்போடு போட்ட கருடன் திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கருடன் திரைப்படம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் OTT-யில் வெளியாகும் என்கின்றனர். இப்படத்தின் OTT உரிமையை அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளது. கருடன் வெற்றியை தொடர்ந்து சூரி நடிப்பில் அடுத்ததாக கொட்டுக்காளி, விடுதலை இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com