விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்.. பற்றி எரிந்த தீயால் பதற்றம்!

Vijay's birthday celebration
Vijay's birthday celebration

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சிறுவன் கையில் தீக்காயம் ஏற்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகர் விஜய். இன்று அவர் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு 'GOAT' என தலைப்பிடப்பட்டுள்ளது. அரசியலில் எண்ட்ரி கொடுத்த விஜய், கோட் படத்தையடுத்து ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவரின் பிறந்தநாளை ஆண்டுதோறும் ரசிகர்கள் அலப்பறையாக கொண்டாடுவார்கள். இந்த முறை அரசியலில் எண்ட்ரி கொடுத்துவிட்டதால் ரசிகர்களும், தொண்டர்களு ஆர்வமாக காத்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்து இருந்தார்.

இதையும் படியுங்கள்:
மீண்டும் ரேஸில் கலக்கும் அஜித்... வைரலாகும் வீடியோ!
Vijay's birthday celebration

இந்நிலையில் விஜய் பிறந்த நாள் முன்னிட்டு அவரது ரசிகர்கள் சார்பில் நீலாங்கரையில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது சாகசம் செய்ய முயன்ற சிறுவரின் கையில் தீக்காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த தீயை அணைக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், மண்ணெண்ணெய் ஊற்றி ஓட்டை உடைக்க முயன்ற சிறுவனின் கையில் தீ பற்றியது. அப்போது அருகில் இருந்த நபர் அதை முயன்ற போது மேலும் மண்ணெண்ணெய் பட்டு இருவர் கையிலும் தீ பற்றி எரிந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் துணியால் மூடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com