கௌதம் வாசுதேவ் மேனனுக்கு இத்தனை கோடி கடன் இருக்கா? தயாரிப்பாளர் வெளியிட்ட ஷாக் தகவல்!

கௌதம் வாசுதேவன்
கௌதம் வாசுதேவன்
Published on

யக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் கடன் குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டார்.

கௌதம் வாசுதேவ மேனன் படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவரது மேக்கிங் ஸ்டைலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தொடர்ச்சியாக படங்கள் இயக்கி, முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழும் எல்லா தகுதியும், திறமையும் கௌதமுக்கு உள்ளது. ஒரு காதலை இந்த அளவிற்கு எடுக்க முடியுமா என்று அனைவரையும் வியக்க வைப்பார்.

இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திர படம் பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல வருடங்கள் அண்டர்புரொடக்ஷனில் இருந்த துருவநட்சத்திரம் பல வெளியீட்டு தேதிகளை கண்டும் இன்னும் திரைக்கு வரவில்லை.

கே. ராஜன்
கே. ராஜன்

அறிமுக இயக்குநர் கிஷன்ராஜின் எமகாதகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கௌதமின் கடன் குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டார். அப்போது பேசிய அவர் இன்றைக்கு எத்தனையோ சின்ன பட்ஜெட் படங்கள் தயாராகி சென்சார் சான்றிதழ் பெற்றும் கூட ரிலீஸ் ஆக முடியாமல் தவிக்கின்றன.

மிகப்பெரிய படமான துருவ நட்சத்திரத்திற்குக் கூட ரிலீசாக முடியாத அளவிற்கு பொருளாதார பிரச்சனை. அதற்குக் காரணம் படத்தின் இயக்குநர் கௌதம் மேனனுக்கு இருக்கும் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் கடன் என்று தெரிவித்தார். சென்ற மாத இறுதியிலிருந்து மூன்று வெளியீட்டு தேதிகளை துருவநட்சத்திரத்துக்கு அறிவித்துவிட்டார்கள். எனினும் படம் வெளிவரவில்லை. எப்போது வெளியாகும் என்பது வழக்கம் போல் கௌதமுக்கே உறுதியாக தெரியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com