அஜித் குமார் நடிப்பில் வெளியாகவிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 2000 திரைகளில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளதாம். இதில் பாலிவுட்டில் அதிகம் திரையிடவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித்தின் அடுத்தப் படத்திற்கான அப்டேட் கடந்த மார்ச் மாதம் வெளியானது. அஜித்தின் 63வது படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்ற தகவல் வந்தது. இப்படத்திற்கு குட் பேட் அக்லி என்று பெயரிடப்பட்டது.
மைத்திரி மூவிஸ் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இந்தப் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனவும் படக்குழுத் தெரிவித்தது. ஆனால் அதுவும் தள்ளிப்போனது. இயக்குனர் ஆதிக் 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்திற்குப் பிறகு தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தார். இந்தநிலையில் அவரின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று வசூலை ஈட்டியதால், அவர் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
இப்படியான நிலையில், இவரின் அடுத்த படமான குட் பேட் அக்லி ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பை தாங்கி நிற்கிறது. இதற்கு மற்றொரு காரணம் அஜித்தான். விடாமுயற்சி படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால், அஜித் ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்தை நம்பியிருக்கிறார்கள்.
இந்த வருடம் ஜனவரியே ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விடாமுயற்சி படமே தாமதமாக ரிலீஸானதால், குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போனது.
இப்போது வரும் ஏப்ரல் 10ம் தேதி படம் ரிலீஸாகவுள்ளது. 2000 திரைகளில் ரிலீஸாகவுள்ளதாம். குறிப்பாக ஹிந்தியில் அதிக திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளதாம்.
மேலும் இப்படத்தில் ஆதிக் ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதாவது மார்க் ஆண்டனி படத்தில் பஞ்சுமிட்டாய் சேல கட்டி பாடல் பயன்படுத்தப்பட்டது. இதுதான் படத்தின் பெரிய ப்ளஸாக அமைந்தது. தியேட்டரில் இந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், படமும் நல்ல வசூலை செய்தது, அதேபோல் குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் தீனா படத்தில் அனைவரையும் ஆட்டம் போட வைத்த வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாம்.