குட் பேட் அக்லி படத்தின் புதிய அப்டேட்… ரசிகர்கள் உற்சாகம்!

Good Bad Ugly
Good Bad Ugly

அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. அதாவது, படத்தில் அஜித்தின் கதாப்பாத்திரத்தைப் பற்றிய சுவாரசிய செய்திகள் வெளிவந்துள்ளதால், அஜித் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அஜித்தின் அடுத்தப் படத்திற்கான அப்டேட் மார்ச் மாதம் வெளியானது.

அஜித் தனது 63வது படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் கைக்கோர்க்கிறார். இப்படத்திற்கு குட் பேட் அக்லி என்று பெயரிடப்பட்டுள்ளது. மைத்திரி மூவிஸ் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாகவும், அடுத்த ஆண்டுப் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் படக்குழுத் தெரிவித்துள்ளது.

இயக்குனர் ஆதிக் 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்திற்குப் பிறகு தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தார். இந்தநிலையில் அவரின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று வசூலை ஈட்டியதால், அவர் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எஸ்.ஜே.சூர்யா. ஆகையால் ஆதிக், அஜித் வைத்து எடுக்கப்போகும் குட் பேட் அக்லி படத்திலும் எஸ்.ஜே.சூர்யாவையே வில்லனாக நடிக்க அழைப்புவிடுத்திருக்கிறார் என்றுக் கூறப்பட்டது. இதனையடுத்து தற்போது படத்தின் சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அஜித் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரங்களில் நடிக்கிறாராம். நீண்ட முடியுடன் ஒரு கதாப்பாத்திரம், வெள்ளை நிற முடியுடன் மற்றொரு கதாப்பாத்திரம் மற்றும் கருமை நிற தலையுடன் young லுக் கதாபாத்திரத்திலும் நடிப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்… ஹீரோ யார்?
Good Bad Ugly

தளபதி விஜய் The GOAT படத்தில் இரண்டு கதாப்பாத்திரங்களில் அப்பா, மகன் என இரண்டிலும் நடிக்கிறார் என்ற செய்திகள் வந்து ஒருமுறை இணையத்தை கலக்கியது. இப்போது, அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதாகக் கூறப்பட்டது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது.

குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகையால், விடாமுயற்சியை விட இப்படம் விரைவாக முடிக்கப்பட்டுவிடும் என்றும், விடாமுயற்சிக்கு முன்னர் இப்படம் திரைக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com