உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்… ஹீரோ யார்?

Rajinikanth And His biopic producer
Rajinikanth And His biopic producer

இளையராஜாவின் பயோபிக் அறிவிப்பின்போதே, பலரது முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது ரஜினிகாந்த் பயோபிக்தான். பெரும்பானவர்கள் ரஜினிகாந்த் பயோபிக்கை படமாக எடுக்கமாட்டார்கள் என்று கூறினார்கள். ஆனால், தற்போது ரஜினிகாந்த் பயோபிக் படமாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதேபோல், இப்படத்தின் தயாரிப்பாளர் பற்றிய முக்கிய தகவலும் வந்துள்ளது.

ஒருவர் வாழ்க்கையின் உண்மை கதையைக் கொண்டு படம் எடுப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதோடு, அவர்களை ஊக்குவிக்கவும் செய்கிறது. அந்தவகையில், ரஜினிகாந்த் ஒரு பேருந்து ஓட்டுனராக தன் வாழ்க்கையை ஆரம்பித்து, கோலிவுட் சூப்பர் ஸ்டாராக எப்படி ஆனார் என்ற கதையைப் பார்க்க யார்தான் ஆசைக்கொள்ள மாட்டார்கள். இப்படம் வெளிவந்தால், இந்தியா முழுவதுமுள்ள மக்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாகவே இருக்கும்.

ஒருசில வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் ஒருவர் ரஜினியிடம் அவருடைய பயோ பிக் எடுப்பதைப் பற்றி பேசியிருக்கிறார். ''அப்போது ரஜினி பையோ பிக்னா எல்லாம் உண்மையா இருக்கனும். என்னுடைய முழு கதையை கூறினால் மக்கள் என்னை வெறுத்துவிடுவார்கள்.'' அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக அப்போது செய்தி பரவியது. இதனையடுத்து ரஜினிகாந்த் பயோபிக் வர வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டது.

சமீபத்தில் இளையராஜாவின் பயோபிக் நிகழ்ச்சியில் தனுஷ் இதுகுறித்து பேசினார். அதாவது எனக்கு இரண்டு பேருடைய வாழ்க்கையில் நடிக்க ஆசையுள்ளதாகக் கூறினார். ஒருவர் இளையராஜா, மற்றொருவர் ரஜினிகாந்த் என்று கூறினார்.

இந்நிலையில் இந்தித் தயாரிப்பாளர் சஜித் நாடியத்வாலா, ரஜினிகாந்தின் பயோபிக்கைத் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர், ரஜினிகாந்தை சில மாதங்களுக்கு முன் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருவதாகவும், இதை யார் இயக்கப் போகிறார்? ரஜினிகாந்தாக யார் நடிக்கப் போகிறார்?  உள்ளிட்ட விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நாக சைதன்யாவின் ‘தண்டேல்’ படத்தை வாங்கிய நெட் ஃப்லிக்ஸ்!
Rajinikanth And His biopic producer

மேலும், இப்படத்திற்கு ஹீரோவாக யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவெடுக்கவில்லை. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் பல நடிகர்களிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ரசிகர்கள் சிலர் ரஜினிகாந்த் பயோபிக்கில் கவின், தனுஷ் ஆகியோர்களில் யாராவது நடித்தால், நன்றாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்தனர். அதேபோல், சிலர் மணிகண்டன் பெயரை கூறுகிறார்கள். ஏனெனில், இவர் கபாலி படத்தில் ரஜினிகாந்த் மகனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com