மணிகண்டனின் அடுத்த படத்தின் ஷூட்டிங் நிறைவு.. வெளியானது போட்டோஸ்!

நடிகர் மணிகண்டன்
நடிகர் மணிகண்டன்

நடிகர் மணிகண்டன் நடிக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம், குட்நைட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரஜினி நடித்த காலா படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார். தொடர்ந்து ஜெய்பீம் படத்தில் தனது அசாத்திய நடிப்பால் பலரது பாராட்டுக்களையும் பெற்றார். இதையடுத்து சமீபத்தில் வெளியான குட்நைட் படத்தில் கதாநாயகனாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

இவரின் அடுத்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருந்த நிலையில் அதற்கு அப்டேட் கிடைத்துள்ளது. தற்போது மணிகண்டன் புது படம் ஒன்றில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் பிரபுராம் வயாஸ் இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தில் கௌரி பிரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மில்லியர் டாலர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக மணிகண்டன் தெரிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் பெயர், ரிலீஸ் தேதி கேட்டு கமெண்ட் தட்டி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com