
ஆஸ்கார் விருது (Academy Awards) என்பது அமெரிக்காவின் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) அமைப்பால், திரைப்படத் துறையில் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மிக உயரிய சர்வதேச விருதாகும். உலக சினிமாவின் மிகச்சிறந்த இயக்குநர்களாகக் கருதப்பட்டும், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை வெல்லாதவர்கள் பலர். அவர்களில் சிலர் இந்த பதிவில்.
'சஸ்பென்ஸ் மாஸ்டர்' என அழைக்கப்படும் பிரிட்டன் திரைப்பட இயக்குநர். இவர் 5 முறை சிறந்த இயக்குநருக்கான பரிந்துரையைப் பெற்றும் ஒருமுறை கூட ஆஸ்கார் வெல்லவில்லை. திரில்லர் படங்களை குறைவாக மதிப்பிடும் அன்றைய போக்கு ஹிட்ச்காக்கு ஆஸ்கர் கிடைப்பதற்கு தடையாக இருந்தது.
அமெரிக்க இயக்குநர் வரலாற்றில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர். தனது 13 திரைப்படங்கள் மூலம் சினிமா தொழில்நுட்பத்தை மாற்றியமைத்தவர், 4 முறை சிறந்த இயக்குனருக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். கடைசி வரை ஆஸ்கார் அவருக்கு கிடைக்கவில்லை.
புகழ்பெற்ற இங்கிலாந்து நாட்டின் இயக்குநர் கிளாடியேட்டர், தெல்மா & லூயிஸ் படங்களுக்காக 3 முறை சிறந்த இயக்குனருக்கான போட்டியில் பரிந்துரைக்கப்பட்டாலும் கடைசி வரை ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை.
ஒரு புகழ்பெற்ற ஆஸ்திரேலியத் திரைப்பட இயக்குனர் புதிய அலை (New Wave) இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த இவர், 6 முறை சிறந்த இயக்குனருக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் கடைசி வரை ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை 2022 இல் வாழ்நாள் சாதனைக்காக கௌரவ ஆஸ்கார் விருது (Academy Honorary Award) மட்டுமே பெற்றார்.
(1925 – 2006) ஒரு அமெரிக்கத் திரைப்பட இயக்குநர், ஐந்து முறை ஆஸ்கார் விருதுக்கு சிறந்த இயக்குநராகப் பரிந்துரைக்கப்பட்டு ஆஸ்கார் கடைசி வரை வெல்ல முடியவில்லை. இறுதியில் 2006 ஆம் ஆண்டில் கௌரவ ஆஸ்கார் விருதைப் பெற்றார். கேன்ஸ் (Cannes), வெனிஸ் (Venice), மற்றும் பெர்லின் (Berlin) ஆகிய மூன்று முக்கிய திரைப்பட விழாக்களிலும் விருதுகளை வென்ற சில இயக்குநர்களில் இவரும் ஒருவர்.
அமெரிக்க இயக்குநர், நடிகர், தனித்துவம் மிக்க திரைப்படத் தயாரிப்பாளராக கருதப்படும் இவர், தனது 'ப்ளூ வெல்வெட்', 'தி எலிஃபண்ட் மேன்' மற்றும் 'மல்ஹோலண்ட் டிரைவ்' ஆகிய படங்களின் சிறந்த இயக்குநருக்கான மூன்று ஆஸ்கார் பரிந்துரைகளைப் பெற்றார். கடைசி வரை ஆஸ்கார் விருது பெறவில்லை. கடைசியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
(1915-1985) ஒரு புகழ்பெற்ற அமெரிக்க இயக்குனர், இவர் பெயர் 4 முறை பல்வேறு துறைகளில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 'சிட்டிசன் கேன்’ படத்திற்காக சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாடமி விருதை வென்றார். இறுதி வரை சிறந்த இயக்குனருக்கான அகாடமி விருது வென்றதில்லை.
ஒரு புகழ்பெற்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குனர், சமூகத்தின் பிரச்சனைகளைத் துணிச்சலாகப் பேசும் படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவர். இவர் பெயர் ஆஸ்கார் விருதுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்டது ஆனால் கடைசி வரை சிறந்த இயக்குனருக்கான அகாடமி விருது கிடைக்கவில்லை. இறுதியாக 2015-ல் கௌரவ ஆஸ்கார் விருதும், BlacKkKlansman படத்திற்காக சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதும் பெற்றார்.
ஒரு புகழ்பெற்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குனர், இவருடைய படைப்புகள் 11 முறை ஆஸ்கார் விருதுக்கு கடந்த 26 வருடங்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவருக்கு விருது கிடைக்கவில்லை.
பாஃப்டா, கோல்டன் குளோப் மற்றும் எம்மி விருதுகளை வென்ற அமெரிக்க திரைப்பட இயக்குநர் 1980 முதல் தொடர்ந்து ஆஸ்கார் விருதுக்கு 4 முறை போட்டியிட்டு இறுதியில் 26 வருடங்களுக்கு பிறகு 2006 ம் ஆண்டு ஒரு வழியாக தி டிபார்ட்டட் (The Departed) படத்திற்கு அகாடமி விருது பெற்றார்.
பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் (Christopher Nolan) தனது பல வருட திரைப் பயணத்தில் அவருக்கு 22 வருடங்களுக்கு பிறகு 2026 ம் ஆண்டு, நீண்ட காலத்திற்குப் பிறகு ஓப்பன்ஹீமர் படத்திற்காக ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. அதற்கு முன்பு இவர் 7 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
ஒரு புகழ்பெற்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குனர், இவரும் தொடர்ந்து சிறந்த இயக்குனருக்கான விருதுக்காக போட்டியிட்டார். ஆனால் இரண்டு முறை சிறந்த திரைக்கதைக்கான விருது தான் கிடைத்தது. இன்னும் சிறந்த இயக்குனருக்கான அகாடமி விருது கிடைக்கவில்லை.