இறுதிக்கட்டத்தை எட்டும் ஜி.வி பிரகாஷின் கள்வன்!

Kalvan Miovie
Kalvan Miovie
Updated on

ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முடிந்துள்ளது. இந்த நிலையில் பின்னணி இசை அமைக்கும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பி.வி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கள்வன். இப்படத்தை ஆக்சன் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் ஜி. டில்லிபாபு தயாரிக்கிறார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்துள்ளார். கதாநாயகி இவானாவும், மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் ஜான்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன், நிவேதா, தீனா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். பின்னணி இசை ரேவா அமைக்கிறார். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவுற்று பின்னணி இசை அமைக்கும் பணி ஹங்கேரி நாட்டில் நடைபெற்று வருகிறது.

வனப்பகுதியை சுற்றி நடக்கும் காமெடி அட்வென்ச்சர் திரைப்படமாக கள்வன் உருவாகி இருப்பதாக படத்தின் இயக்குனர் பி.வி ஷங்கர் தெரிவிக்கிறார். மேலும் படத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வெளியிட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ள ரேவா தெரிவித்து இருப்பது, கள்வன் திரைப்படம் உணர்வுகளையும், அசைவுகளையும் முக்கியத்துவமாக கொண்ட திரைப்படம். இதனால் இதற்கு தகுந்தார் போல் பின்னணி இசையை அமைத்துள்ளோம். இது மிகவும் சவாலான காரியமாக இருந்தது. மேலும் இந்தப் படத்தின் கதையின் மூலம் இசைக்கு தேவையான பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com