Movie Poster and Director
Movie Poster and Director

நாயகனாக களமிறங்கும் ஹரி பாஸ்கர்! அறிமுக இயக்குநர் அருண்!

Published on

புதுமுக இயக்குநர் அருண் இயக்கத்தில் ஜம்ப்கட்ஸ் ஹரி பாஸ்கர் மற்றும் பிக் பாஸ் லாஸ்லியா ஆகியோர் சேர்ந்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை வெளியிட்டார் இயக்குநர் அட்லீ.

கோலிவுட் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் 1985 முதல் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது. பல பிரபலமான படங்களை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், கடைசியாக தயாரித்த விஜயின் மெர்சல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதற்கடுத்து 2023-ல் தயாரித்த வல்லவனுக்கும் வல்லவன் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இந்நிலையில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி புதிய பட அறிவிப்பினை சில நாட்கள் முன் வெளியிட்டார். ஜூலை 12ம் நாள் இதன் போஸ்டர் வெளியாகுமென அறிவித்திருந்தார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக ஹரி பாஸ்கர் நடித்துள்ளார். அதேபோல் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ஃப்ரண்ட்ஷிப், கூகுல் குட்டப்பா போன்ற படங்களில் நடித்துள்ளார். அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஓஷோ வெங்கட் இசையில், குலோத்துங்க வர்மன் ஒளிப்பதிவில், ராமசுப்பு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

இயக்குநருக்கு இது முதல் படம் என்றாலும், இப்படம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உள்ளது என்றே கூற வேண்டும். ஏனெனில், ஹரி பாஸ்கருக்கும் இது முதல் படமாகும். ஒரு யூட்யூபரை திரையில் பார்க்க யாருக்குத்தான் எதிர்பார்ப்பு இருக்காது.

இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இதற்குமுன்னர் சில படங்களில் துணை இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் (சந்திரமுகி 2) பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் பல முயற்சிகளுக்கு பிறகு தற்போது முதன்முறையாக ஒரு படத்தை தனித்து இயக்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
சிவாஜி கணேசன் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் கர்ணன்தான்!
Movie Poster and Director

இதன் போஸ்டரை வைத்துப் பார்க்கும்போது இது ஒரு காமெடி கலந்த படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ட்ரைலர், டீசர் வெளியிட்டப் பின்னரே கணிப்பு சரியா என்பதை உறுதிசெய்ய முடியும்.

புதுமுக இயக்குநர்களே சமீபக்காலமாக ரசிகர்களுக்கு பிடித்த வகையில் படங்களை கொடுத்து வருகிறார்கள். ஆகையால், இப்போது இயக்குநர், ஹீரோ யார் என்பதை தாண்டி ஒரு படத்தின் கதைக்கே ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

அந்தவகையில் இந்த அறிமுக கூட்டணி அந்த எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!!

இந்த புதுமுக கூட்டணி வெற்றிக் கூட்டணியாக மாறுமா?

logo
Kalki Online
kalkionline.com