73வது பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார்... வைரலாகும் படங்கள்!

#HBDSuperstarRajinikanth
#HBDSuperstarRajinikanth
Updated on

மிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினிகாந்த், தனது வசீகர நடிப்பாலும், ஸ்டைலாலும் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

தமிழ் மொழி ரசிகர்களைப் போலவே பிற மொழிகளிலும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ரஜினிகாந்த், கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்து அசத்தியிருப்பார். வித்தியாசமான தோற்றத்தில் நடித்து பலரையும் கவர்ந்திருப்பார். இந்த படம் மக்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த வெற்றியை பாராட்டி தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர், இயக்குனர்,இசையமைப்பாளர் என பலருக்கும் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். தலைவர் 170 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மேலும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

இன்று அவரது 73வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் 170வது படத்தின் டைட்டில் வெளியாகவுள்ளது. இவரின் பிறந்தநாளையொட்டி, ரசிகர்கள், நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். இதனிடையே தனது 73வது பிறந்தநாளை மகள்கள், பேரன்கள் என குடும்பமாக கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

logo
Kalki Online
kalkionline.com