ஐசரி கணேஷ் படத்தில் ஹிப் ஹாப் தமிழா!

ஐசரி கணேஷ் படத்தில் ஹிப் ஹாப் தமிழா!
Updated on

ஐசரி கே கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் தமிழா கதாநாயகனாக நடிக்கிறார்.

'வெந்து தணிந்தது காடு' படத்தைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா கதாநாயகனாக நடிக்கிறார். கார்த்திக் வேணு கோபாலன் என்பவர் இயக்குகிறார்.

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கும் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் தயாராகும் ஏழாவது படம் இது. ‘எல் கே. ஜி’, ‘கோமாளி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்களைத் தயாரித்த வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

ஐசரி கே கணேஷ் - ஹிப் ஹாப் தமிழா - கார்த்திக் வேணுகோபாலன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது. மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர் நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் கோகுல் இயக்கத்தில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது என்பது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com