‘கார்த்தி 29’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ‘ஹிட்’ நடிகர்

‘கார்த்தி 29’படத்தில் நடிகர் கார்த்திக்குடன் இணைந்து பிரபல தெலுங்கு நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
actor Karthi
actor Karthi
Published on

தமிழ்பட உலகில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் மற்றும் நடிகர் சூர்யாவில் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்தி, அமீர் இயக்கத்தில் 2007-ம் ஆண்டு பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே கார்த்திக்கு வெற்றிப்படமாக அமைந்ததுடன் அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், பையா, சிறுத்தை போன்ற அவரை முன்னணி நடிகர்கள் வரிசையில் அமர வைத்தது..

காதல், கமர்ஷியல், ஆக்ஷன் படங்களில் கலக்கி வந்த கார்த்தி மணிரத்னத்தில் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று சிறப்புமிக்க படத்தில் நடித்தன் மூலம் உலகளவில் பிரபலமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'மெய்யழகன்' படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் கார்த்திக்கு நல்ல பெயரையும் வாங்கிக்கொடுத்தது.

தற்சமயம் நடிகர் கார்த்தி, நலன் குமாராசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' என்ற படத்திலும், சர்தார் வெற்றி பெற்றதை தொடர்ந்து பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார்.

karthi and nani
karthi and nani

இந்நிலையில், டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி தனது புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடல் பின்னணியில் நடக்கும் வெறித்தனமான கேங்ஸ்டர் கதையம்சத்தில் உருவாகும் இந்த படம் கார்த்தியின் 29-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 'கார்த்தி 29' என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. ஏற்கனவே இந்த படத்திற்காக பிரம்மாண்டமான செட் ஒன்று ராமேஸ்வரம் கடலோர பகுதியில் போடப்பட்டு வருகிறது. மேலும், காரைக்காலிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கூடுதல் தகவலாக இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரான நானி கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கார்த்தி நடிகர் நானியில் 'ஹிட் 3' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நடிகர் நானி தயாரிக்க இருக்கும் 'ஹிட்' படத்தின் நான்காவது பாகத்தில் நடிகர் கார்த்தி நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கைதி 2 அப்டேட் கொடுத்த கார்த்தி..!
actor Karthi

நானி தயாரிக்கும் படத்தில் கார்த்தி நடிப்பதும், கார்த்தி நடிக்கும் படத்தில் நானி நடிப்பதும் இருவருக்கும் இடையேயான நட்பை வலுப்படுத்துவதாக தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com