ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் இடம்பெறுமா 'ஹோம்பவுண்ட்'? இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் நாள்..!

homebound
homeboundsource:dailythanthi
Published on

“ஒரு திரைப்படம் உலக தரத்தில் சிறந்தது” என்று அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கும் உலகின் உச்சகட்ட விருதுதான் அமெரிக்காவின் Academy Awards எனப்படும் Academy of Motion Picture Arts and Sciences (AMPAS) மூலம் வழங்கப்படும் ஆஸ்கார் விருது (Oscar Awards) . லாஸ் ஏஞ்சல்ஸில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் இந்த விருது விழாவை உலகெங்கும் உள்ள சினிமா பிரியர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்ப்பது வழக்கம்.

உலகம் முழுவதும் உள்ள திரைப்படத் துறையின் உச்ச அங்கீகாரமாக இது கருதப்படுகிறது. இதில் வெல்லும் படம் அல்லது நடிகர் சர்வதேச அளவில் புகழ் பெறுவதுடன், ஒரு நாட்டின் திரைப்படத் தரத்தை உலக மேடையில் பறைசாற்றும் வாய்ப்பாகவும் இது அமைகிறது. மேலும், விருது பெற்ற பிறகு அந்தப் படத்தின் வர்த்தக மதிப்பு பல மடங்கு உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதுக்கான பரிந்துரையே ஒரு திரைப்படத்தின் சிறப்பைக் காட்டும் என்றால் அதில் பங்குபெற்று இறுதிச் சுற்று வரை முன்னேறுவது மேலும் சிறப்பாக கருதப்படுகிறது. அதன் படி இந்த வருடம் 98 வது ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரையில் அடுத்த சுற்றை எட்டிய இந்திய திரைப்படமாக நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர் (Ishaan Khatter) , விஷால் ஜேத்வா ( Vishal Jethwa)மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள ஹோம் பவுண்ட் (Homebound) (2025) என்ற இந்தி படம் தேர்வாகியுள்ளது .

இரண்டு பால்யகால நண்பர்கள் தேசிய போலீஸ் தேர்வை வெல்லும் நோக்குடன் வாழ்க்கையில் உயர்வை பெறுவது பற்றிய கதையில் அவர்கள் தனிப்பட்ட மற்றும் சமூக சூழல்கள் ,சாதி மற்றும் மத வேறுபாடுகள் போன்ற சவால்களை எதிர்கொள்வதை மனித உணர்வுகளை அசைக்கும் விதத்தில் எடுக்கப்பட்ட இப்படம் திரைக்கு வருவதற்கு Cannes திரைப்பட விழாவில் Un Certain Regard பிரிவில் பாராட்டுகளை பெற்றதுடன் டொராண்டோ திரைப்பட விழாவில் (‘TIFF’) தேர்வு செய்யப்பட்டு ரன்னர் அப்பாக சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை குவித்தது.

இதற்கிடையில் இந்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் "ஹோம்பவுண்ட் " படம் பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் தகுதிப் பட்டியலிலும் தேர்வானது. இதற்கிடையில் இரண்டாம் பகுதி சுற்றிலும் இந்த படம் முன்னேறி பலரது வாழ்த்துகளைப் பெற்று வருகிறது .

இந்தச் சுற்றில் இந்தப் படத்துடன் "பாலஸ்தீன் 36" "தி சீக்ரெட் ஏஜென்ட்" "நோ அதர் சாய்ஸ்" உள்ளிட்ட 15 சிறந்த சர்வதேச படங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து ஐந்து படங்கள் மட்டுமே இறுதித் தேர்வு பரிந்துரைக்கு தேர்வாகும் நிலையில் வருகிற 22ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ள இறுதிப்பட்டியலில் ஹோம்பவுண்ட் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் படக்குழுவினருடன் மொத்த இந்தியாவும் எனலாம்.

இதுவரை இந்தியாவுக்கு ஆஸ்கார் விருது கிடைப்பது அரிதான அதே வேளையில் பெருமைமிக்க ஒன்றாகவும் இருந்து வருகிறது. பானு அதையா (காந்தி - 1983), ஏ.ஆர். ரஹ்மான் (ஸ்லம்டாக் மில்லியனர் - 2009), ரசூல் பூக்குட்டி, 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' மற்றும் 'ஆர்.ஆர்.ஆர்' (நாட்டு நாட்டு பாடல்) ஆகிய சாதனைகளின் வரிசையில், சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் 'ஹோம் பவுண்ட்' தேர்வாகியுள்ளது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தியேட்டர் ரிலீஸ் மிஸ் ஆனாலும் OTT-ல் கலக்கல்..! இந்த வாரம் OTT ரிலீஸ் இதோ ..!
homebound

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com