ஒரு தரமான திரைப்பட விமர்சனத்தை நாம் எவ்வாறு உணர வேண்டும்?

Movie review
Review
Published on

ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்வதற்கு நிபுணத்துவ அறிவு தேவையில்லை. அதற்கு ஒரு சிறிய கவனிப்புத் திறன் மட்டுமே தேவை. அது ஒரு தமிழ்ப் படமாக இருந்தாலும் சரி, ஹாலிவுட் த்ரில்லர் படமாக இருந்தாலும் சரி அல்லது கொரிய காதல் படமாக இருந்தாலும் சரி விமர்சனத்தின் அடிப்படைகள் எல்லா படத்திற்கும் பொதுவான ஒன்றே.

என்னென்ன விஷயங்கள் தேவை இதற்கு?

இதை ஒவ்வொருவரும் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

கதை & கதைக்களம் (Storyline & Plot): கதை தெளிவாகவும், அசலாகவும் (original), நல்ல வேகத்திலும் இருந்ததா? அதற்கு வலுவான ஆரம்பம், மையப்பகுதி மற்றும் முடிவு இருந்ததா?

நடிப்பு (Acting): நடிப்புகள் நம்பக்கூடியதாகவும், வெளிப்பாடாகவும் (Expressive) இருந்ததா? நடிகர்கள் தங்கள் பாத்திரங்களுக்கு ஏற்றவாறு இருந்தார்களா?

இயக்கம் & ஒளிப்பதிவு (Direction & Cinematography): படம் எவ்வளவு சிறப்பாக படமாக்கப்பட்டது? காட்சிகள், கேமரா கோணங்கள், ஒளியமைப்பு (lighting) ரசிக்கும்படி இருந்ததா?

இசை & ஒலி (Music & Sound): பின்னணி இசை உங்கள் மனநிலையை மேம்படுத்தியதா? ஒலிகள்(sound effects) அர்த்தமுள்ளதாகப் பயன்படுத்தப்பட்டதா?

உரையாடல்கள் (Dialogues): வரிகள் மறக்க முடியாதவையாக, இயல்பானவையாக இருந்தனவா?

எடிட்டிங் & வேகம் (Editing & Pacing): படம் மிகவும் மெதுவாக இருந்ததா அல்லது மிக விரைவாக இருந்ததா? காட்சிகள் சீராக நகர்ந்ததா? கதை அமைப்பு & துணை உரை (Narrative Structure & Subtext) கதை எவ்வாறு சொல்லப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். நேராகவா, திணிக்கப்படுகிறதா அல்லது அடுக்குகளாகச் சொல்லப்படுகிறதா?.

குறியீட்டு, காட்சி உருவகங்கள் (Symbolism & Visual Metaphors): சில படங்களில் உபயோகிக்கப்பட்ட வண்ணங்களும், பொருட்களும் பெரும்பாலும் அந்தக் காட்சியின் அர்த்தத்தை முன்கூட்டியே நமக்கு உணர்த்திவிடும். அவற்றைக் உணரும்போது சில நேரங்களில் நம் கண்களுக்கு செழுமையைச் (richness) சேர்க்கிறது.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு பிடித்த நடிகர்களின் படத்தின் FDFS ஐ பார்த்ததே இல்லையா? இதோ உங்களுக்கான வழி…
Movie review

கதாபாத்திர வளைவுகள் & மேம்பாடு (Character Arcs & Development): மோதல் அல்லது பிற காரணங்களால் படத்தின் ஆரம்பத்தில் பார்த்த கதாபாத்திரங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் பாருங்கள். காரணம் யதார்த்தமான மாறுபாடு சில நேரங்களில் கதாபாத்திரங்களை மிகவும் சக்திவாய்ந்ததாக ஆக்குகின்றன.

பார்வையாளர்களின் தாக்கம் & பின் சிந்தனை(Audience Impact & Afterthought): ஒரு படம் உங்கள் மனதில் நிலைத்திருந்தால்; அதுதான் அந்தப் படத்தின் வெற்றியே. காரணம் உங்களுக்குள் உணரப்படும் நீடித்த தாக்கம் படத்தின் உண்மையான தரத்தைக் காட்டும்.

குருட்டு விமர்சனத்தை(Blind Review) விட்டுவிடலாமே?

குருட்டு விமர்சனம் என்பது ஒரு படத்தை யார் இயக்கியது? யார் நடித்தது? என்று தெரியாமல் அல்லது மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதை மட்டும் பார்த்து மதிப்பீடு செய்வதாகும். இதுதான் ஒரு பாரபட்சமற்ற கருத்தை மற்ற பார்வையாளர்களிடம் உருவாக்க உதவுகிறது. சுருக்கமாகச் சொன்னால் ஒரு சாதாரண மனிதரிடமிருந்து வரும் ஒரு நல்ல திரைப்பட விமர்சனம் நேர்மையானதாகவும், சிந்தனை மிக்கதாகவும், அந்தப் படம் அவர்களை எப்படி உணரவும் சிந்திக்கவும் வைத்தது என்பதை அடிப்படையாகக் கொண்டதே.

இதையும் படியுங்கள்:
How to face challenges fearlessly? Watch this movie ‘The Cat returns’ !
Movie review

இறுதியில் ஒரு படத்தைக் கணிக்க நீங்கள் புத்திசாலியாகத்தான் இருக்க வேண்டும் என்பது தேவையில்லை. அவரவர் மொழியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு முழுப் படம் முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்டதா? இதற்கான விடைதான் ஒரு படத்தின் நேர்மையான விமர்சனத்தை அனைத்து தரப்பினரிடமிருந்தும் கொண்டுவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com