இந்தியாவில் முதல் நாள் முதல் காட்சியில் (FDFS) ஒரு முன்னணி நட்சத்திரத்தின் படத்தைப் பார்ப்பது வெறும் படமாக இல்லாமல் அதை ஒரு கொண்டாட்டமாக பல கோடி மக்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் இது அனைவருக்கும் எளிதாக கிடைக்கிறதா? இல்லை அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அதை எப்படி வாங்கலாம்? அதற்கென்ன உத்திகள் இருக்கிறது?
FDFS டிக்கெட்டுகளை பெறுவதற்கான தந்திரங்கள்
ரசிகர் மன்ற அணுகல்: பல நட்சத்திர ரசிகர் மன்றங்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு அதை அவர்களின் உறுப்பினர்களிடையே விநியோகிக்கின்றன. இந்த மன்றத்தில் சேரும் பட்சத்தில் முன்கூட்டியே நாமும் பெறலாம்.
மாநிலங்களுக்கு இடையேயான முன்பதிவு: தேவை குறைவாக உள்ள அண்டை நகரங்களுக்கு நீங்கள் தீவிர ரசிகராக இருந்தால் பயணம் செய்யலாம். உதாரணமாக ‘சென்னை ரசிகர்கள் ஆந்திராவிற்கு செல்வது போன்றது’.
மல்டிபிளக்ஸ் செயலிகள்: அறிவிப்பு அலேர்ட்ஸ் (Alerts) கூடிய BookMyShow போன்ற செயலிகளைப் பயன்படுத்துவது. ரிசர்வேஷன் (Reservation) ஆரம்பமாகும் தருணத்தில் அதை பற்றிய தகவல்கள் உங்களுக்கு முன்கூட்டியே வரலாம்.
அதிகாலை நிகழ்ச்சிகள்: கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் காலை 6 மணி காட்சிகளை அனுமதிக்கின்றன. அதேநேரத்தில் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் திரையரங்கமே ஆரம்பமாகின்றன.
கட்டங்களாக நடக்கும் முன்பதிவுகள்: சில மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் கட்டங்களாக (காலை, மதியம், மாலை) என்று டிக்கெட்டுகளை வெளியிடுகின்றன. இதை தவறாமல் கண்காணித்தால் FDFS டிக்கெட்டுகளை பெறலாம்.
மாநிலம் சார்ந்த ஆப்ஸ்: BookMyShow தேசிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதே வேளையில் Paytm Movies, TicketNew (South India), SPI சினிமாஸ் போன்ற மாநிலம் சார்ந்த செயலிகள் பெரும்பாலும் டிக்கெட்டுகளை முன்கூட்டியே வெளியிடுகின்றன. Exclusive offers யும் வழங்குகின்றன.
கார்ப்பரேட் டை-அப்கள் (Corporate Tie-Ups): சில நிறுவனங்கள் மொத்தமாக முன்பதிவு செய்ய திரையரங்குகளுடன் கூட்டு சேருகின்றன. நீங்கள் IT அல்லது ஊடகங்களில் பணிபுரிந்தால் உங்கள் முதலாளிக்கு அத்தகைய ஏற்பாடுகள் உள்ளதா? எனத் தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக பெங்களூரு அல்லது ஹைதராபாத் போன்ற நகரங்களில்.
ஸ்பான்சர்கள் மூலம் முன்பதிவு: சில பிராண்டுகள் (எ.கா., பானங்கள் அல்லது மொபைல் நிறுவனங்கள்) FDFS நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்து போட்டிகள் அல்லது பிற திட்டங்கள் மூலம் டிக்கெட்டுகளை வழங்குகின்றன.
தியேட்டர் லாயல்டி திட்டங்கள்: INOX Rewards அல்லது PVR Privilege போன்ற லாயல்டி திட்டங்களில் சேரலாம். இந்த திட்டத்தில் இருக்கும் உறுப்பினர்கள் சில நேரங்களில் முன்கூட்டியே FDFS டிக்கெட்கான அணுகலை பெறலாம்.
சமூக ஊடகங்கள்: X ( ட்விட்டர்), இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சேனல்களில் தியேட்டர்கள் மற்றும் ரசிகர் மன்றங்களைப் பின்தொடரவும். அவர்கள் பெரும்பாலும் flash ticket drops அல்லது FDFS பாஸ்களை சில போட்டிகளை நடத்தி அறிவிப்பார்கள்.
தியேட்டர் ஊழியர் இணைப்புகள்: தியேட்டர் ஊழியர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது சில நேரங்களில் டிக்கெட்டுகள் எப்போது நேரலைக்கு வருகின்றன அல்லது தனித்துவமாக விற்பனை செய்ய ஏதேனும் வழி உள்ளதா போன்ற தகவலை உங்களுக்கு வழங்கலாம்.