டிசம்பர் முதல் வாரம் ரித்திக் ரோஷனின் ‘Fighter' பட டீசர்..

HRITHIK ROSHAN FIGHTER
HRITHIK ROSHAN FIGHTER
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on: 

சித்தார்த் ஆனந்த இயக்கத்தில் ரித்திக் ரோஷன் நடித்த Fighter படத்தின் டீசர் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ரித்திக் ரோஷன் மற்றும் தீபிகா இணைந்து நடித்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் போஸ்டர்கள் மூலம் இது ஒரு ஆக்ஷன் படம் எனத் தெரிய வருகிறது. இப்படத்தை பெரிய அளவு ஹிட் கொடுக்க ஒரு மாதம் விளம்பரம் படுத்தும் வேலைகள் நடைபெறவுள்ளது.

இதையடுத்து இந்த படத்தின் டீசர் டிசம்பர் மாதம் முதல் வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் இதுவரைப் பார்த்திராத அளவு ஒரு பெரிய ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இயக்குனர் சித்தார்த் மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோர் இணைந்திருக்கும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். பாலிவுட் படமான Fighter படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை இந்த ஆண்டு தொடக்கத்திலேயே படக்குழு வெளியிட்டது.

இப்படத்தில் ரித்திக் ரோஷன், தீபிகா படுகொன், அணில் கபூர், கரண் சிங், அக்ஷய் ஓபராய் ஆகியோர் நடித்துள்ளனர்.மேலும் இப்படத்தை Viacom 18 studio மற்றும் Marflix picture தயாரிக்கின்றது.

இப்படத்தை 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்தது. ஆனால் கோவிட் காரணமாக படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் தாமதமான நிலையில் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் Fighter படம் அடுத்த ஆண்டு குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com