"நான் ஒரு கம்யூனிஸ்ட்" நடிகை கீர்த்தி சுரேஷ்!

"நான் ஒரு கம்யூனிஸ்ட்"  நடிகை கீர்த்தி சுரேஷ்!
Published on

'மகாநடி' திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகையும், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிஸியாக படங்கள் நடித்துவரும் நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் “நான் ஒரு கம்யூனிஸ்ட்” என ஓபனாக சொல்லியிருப்பது சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களில் மக்களின் நம்பிக்கை பெற்ற இயக்குநர் என பெயர்பெற்ற மாரி செல்வராஜ் மாமன்னன் எனும் படத்தில் எடுத்திருக்கிறார். இப்படத்திற்கு, இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார், ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உதயநிதி, வடிவேலு, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மாமன்னன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்யை தினம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், “மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருப்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. ரொம்ப நாள் கழிச்சு தமிழில் இப்படி ஒரு பெரிய படத்தில் நடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தை அனைவரும் திரையரங்கில் பார்க்கவேண்டும். இந்த படத்தில் முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். மாமன்னன் படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்டாக நடித்துள்ளேன். பாடத்தில் என்னுடைய கதாபாத்திரம் வேற மாதிரி இருக்கும். என்னுடைய கதாபாத்திரம் அனைத்து பெண்களையும் கனெக்ட் ஆகும் என நினைக்கிறேன் என்றார். அப்போது செய்தியாளர்கள் கீர்த்தி சுரேஷ்க்கு எப்போது திருமணம் என கேள்வி எழுப்பினார்கள், அதற்கு பதில் அளித்த கீர்த்தி, “ஏங்க என்ன கல்யாணம் பண்ணி கொடுப்பதிலேயே தீவிரமா இருக்கீங்க, என்னுடைய கல்யாணத்தை நானே சொல்வேன்” என கலகலப்பாக பேசி முடித்தார்.

சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், துபாயைச் சேர்ந்த தொழிலதிபருமான ஃபர் ஹான் பின் லியாகத் என்பவதை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், தன் திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக கீர்த்தியின் பதில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com