விக்னேஷ் சிவன் நயன்தாரா சந்தோஷமாக இருக்க நான்தான் காரணம் – நடிகர் சொன்ன ஷாக் தகவல்!

Vicky nayanthara
Vicky nayanthara
Published on

தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதற்கு நான்தான் காரணம் என்று பேசியிருக்கிறார் தமிழ் பட நடிகர்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நானும் ரவுடிதான் படத்தில்தான் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்கள். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டு வருடம் காத்திருப்பிற்கு பிறகு சமீபத்தில்தான் இவர்களின் கல்யாண ஆவனப்படம் வெளியிடப்பட்டது. அந்த சம்பவத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் எங்குப் பார்த்தாலும் இவர்களின் பேச்சுதான். ஏனெனில், நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் அந்த ஆவணப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தன.

ஆகையால் அந்தப் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் நயன்தாரா மீது குற்றம் சாட்டியதோடு 10 கோடி கேட்டிருந்தார். இதற்கு நயன்தாரா பதிலடி கொடுக்க, பெரிய பஞ்சாயத்தே வெடித்தது.

இதைத்தொடர்ந்து நயன்தாரா மீது தனுஷ் வழக்கு போட்டுள்ளார். இப்படியான நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தற்போது சந்தோஷமாக வாழ்வதற்கு நான்தான் காரணம் என்று சொல்லியிருக்கிறார் மிர்ச்சி சிவா.

தமிழ்படம் 1 மற்றும் 2 ஆகிய படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் மிர்ச்சி சிவா. ஆகையாலயே அகில உலக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தற்போது அவர் சூது கவ்வும் 2 படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்:
பிக்பாஸ் 8: கையெடுத்து கும்பிடுவதில் என்னடா தப்பு… இது ஒரு பிரச்னையா?
Vicky nayanthara

அப்போது அவர் பேசுகையில், “முதன் முதலில் விக்னேஷ் சிவன் தன்னிடம் தான் நானும் ரவுடிதான் படத்தின் கதையை கூறினார்.

ஆனால் அப்போது என்னால் பண்ண முடியாத சூழல். இதனால் நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் இந்த கதையை கூறியிருக்கிறார். ஒருவேளை இந்த படத்தில் நான் நடித்திருந்தால் நயன்தாரா நடித்திருக்க வாய்ப்பில்லை. இதனால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரின் காதல் கைக்கூடி இருக்க வாய்ப்பு இல்லை. ஒரு விஷயம் நமக்கு கிடைக்கவில்லை என்றால், மற்றொரு நல்ல விஷயத்திற்காகதான் அது நடக்கும். அப்படித்தான், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நானும் ஒரு காரணம்.” என்று பேசியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com