மஞ்சிமா மோகனை சந்தித்த பிறகு தான் இளைஞனாக மாறினேன்! நடிகர் கெளதம் கார்த்திக்!

கெளதம்  கார்த்தி - மஞ்சிமா மோகன்
கெளதம் கார்த்தி - மஞ்சிமா மோகன்
Published on

கௌதம் மற்றும் மஞ்சிமாவின் காதலுக்கு இரு வீட்டாரர்களும் சம்மதித்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். தன்னுடைய தந்தை கார்த்திக் எப்போதுமே சொல்வாராம், தனக்கான பெண் யார் என்று உணரும் போதுதான் இளைஞனாக மாறுவோம் என்று, அந்த வகையில் மஞ்சிமா மோகனை பார்த்த பிறகுதான் சிறு வயதிலிருந்த நான் இளைஞனாக மாறியதை உணர்ந்தேன் என கௌதம் கார்த்திக் கூறியுள்ளார்.

நடிகர் கௌதம் தந்தை நடிகர் கார்த்திக்கும் காதல் திருமணங்கள் செய்தவர்தான். அவரும் தன்னுடன் சோலைக்குயில் என்ற படத்தில் நடித்த ராகினி என்கிற நடிகையை காதல் திருமணம் செய்தார். பின்னர் ராகினியின் தங்கை ரதியையும் காதல் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெளதம்  கார்த்தி - மஞ்சிமா மோகன்
கெளதம் கார்த்தி - மஞ்சிமா மோகன்

கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் ஜோடியாக இயக்குநர் முத்தைய்யா இயக்கத்தில் தேவராட்டம் என்கிற படத்தில் நடித்திருந்தார்கள். அந்தப் படத்தில் நடித்ததிலிருந்து இருவரைப் பற்றியும் பல கிசுகிசுக்கள் வந்தன. சமீபத்தில் தான் சமூக வலைதளத்தில் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தாங்கள் காதலிப்பதை உறுதி செய்தனர். நேற்று திருமண தேதியையும் முறையாக அறிவித்து விட்டனர். தேவராட்டம் படத்தின் படப்பிடிப்பின் போதும் அதன் பின்னர் ஓராண்டும் நண்பர்களாக மட்டுமே பழகி பின்னர் தான் காதலிக்க தொடங்கியதாக கூறியிருக்கிறார்கள்.

தற்போது 1947 மற்றும் 10 தலை ராவணன் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் கௌதம் கார்த்திக் திருமணத்திற்குப் பிறகு நடிக்கலாமாவேண்டாமா என்று இனிமேல் தான் யோசிக்க வேண்டும் என்று மஞ்சிமா மோகன்கூறியிருக்கிறார் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ரங்கூன் மற்றும் ஒருநல்ல நாள் பாத்து சொல்றேன் ஆகிய படங்கள்தான் மஞ்சிமா மோகனுக்கு பிடித்தபடங்கள் என்கிறார் மஞ்சிமா.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நடிகர் கௌதம் கார்த்திக் ,நடிகை மஞ்சிமாமோகன் தங்களது திருமண தேதியை பத்திரிக்கையாளர் சந்திப்பில்அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இருவரும் வரும் 28-ஆம் தேதி அவர்களது நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்கள்மட்டும் கலந்து கொள்ளும் வகையில் தங்களுடைய திருமண நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com