சினிமா துறையில் மேலும் சூடு பிடிக்கும் போதைப் பொருள் விவகாரம்! நடிகர் கிருஷ்ணா பரபரப்பு வாக்குமூலம்!

எனக்கு உடலில் பிரச்னைகள் உள்ளதால் நான் போதைப் பொருள் உட்கொள்ள முடியாது என்று போலீசில் ஆஜரான கிருஷ்ணா கூறியுள்ளார்.
actor krishna
actor krishna
Published on

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் பிரசாத் என்பவரிம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வாங்கியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, கடந்த 23-ம்தேதி போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் இவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து எடுத்த இரத்த மாதிரியில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தததையடுத்து அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரை ஜூலை 4-ம்தேடித வரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஸ்ரீகாந்த் சொன்ன தகவல் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா தலைமறைவானார். அதனையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்திய நிலையில் கிருஷ்ணா கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் நேற்று மாலை அவர் திடீரென போலீசில் ஆஜரானார்.

சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவசோதனையும் நடத்தப்பட்டது. மேலும் கிருஷ்ணாவின் வீட்டிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணையின் போது தாம் போதைப் பொருட்களை பயன்படுத்தியது இல்லை என நடிகர் கிருஷ்ணா கூறியிருக்கிறார். மேலும் விடிய விடிய போலீஸ் விசாரணை நடந்தியதில் கிருஷ்ணா பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதில், தனக்கு போதைப் பொருள் பழக்கம் கிடையாது, தான் ஏற்கெனவே இதய நோயாலும், இரைப்பை பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டிருப்பதால் போதைப் பொருள் உட்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரசாத்துக்கும் தனக்கும் நேரடியான தொடா்பு கிடையாது என்றும் கூறியுள்ளாா்.

"நானும் நடிகர் ஸ்ரீகாந்தும் நல்ல நண்பர்கள் மட்டுமே. விருந்து நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒன்றாக கலந்து கொண்டுள்ளோம். என்னை பற்றி ஸ்ரீகாந்த் சொன்னது அனைத்தும் தவறான தகவல். போதைப் பொருள் கும்பலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இருந்தாலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவ பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் இந்த விஷயத்தில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்:
ரூ.12,000க்கு கொக்கைன்.. போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!
actor krishna

மேலும் போதைப்பொருள் பயன்படுத்துவோர் பட்டியலில் பிரபல முன்னணி நடிகர், இளம் இசையமைப்பாளர் உள்ளிட்ட 10 நடிகர்-நடிகைகளின் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், அவர்கள் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சிக்கப் போவது யாரு யாரு?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com