மார்க்கெட்டில் மூட்டைத் தூக்கினேன் – கொட்டுக்காளி இயக்குநர்!

Kottukkaali Director
Kottukkaali Director
Published on

கொட்டுக்காளி படத்தின் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், தான் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறியிருக்கிறார் என்பது குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

முதலில் கூழாங்கல் என்ற படத்தின் மூலம் இயக்குநரானவர் பி.எஸ்.வினோத்ராஜ். இந்தப் படம் சினிமா வட்டாரத்தில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பல விருதுகளையும் வாங்கியது. இதையடுத்து இவர் சூரி, அன்னா பென் உள்ளிட்டோரை வைத்து கொட்டுக்காளி படத்தை இயக்கியிருக்கிறார். பெர்லின் திரைப்பட விழாவில் பாராட்டுகளை பெற்றிருக்கிறது கொட்டுக்காளி. இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் இயக்கியிருக்கிறார். வினோத்ராஜ் தனது வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.

மதுரையைச் சேர்ந்த வினோத்ராஜ் 4ம் வகுப்பு படிக்கும்போதே அவரது அப்பா இறந்துவிட்டார். அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. இதனால், அவர் படிப்பை நிறுத்திவிட்டு பூ மார்க்கெட்டில் மூட்டைத் தூக்கி வேலைச் செய்திருக்கிறார்.

அப்படி வேலை செய்துக்கொண்டிருக்கும்போது அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அடிக்கடி படப்பிடிப்பு நடப்பதை பார்த்திருக்கிறார். இதன்மூலம்தான் அவருக்கு சினிமா மீது ஆசை வந்திருக்கிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு அவர் சென்னைக்கு சினிமாவில் சாதிக்க சென்றிருக்கிறார். அங்கு சாப்பாட்டுக்காக அவர் பஸ்ஸுக்கு கிரீஸ் போடும் வேலை செய்திருக்கிறார். இதுபோல சிறு சிறு வேலை செய்திருக்கிறார். பின்னர் சிடி கடையில் வேலை செய்தால் சினிமாக்காரர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவருக்கு ஐடியா வந்திருக்கிறது.

சிடி கடையில் சேர்ந்தவுடன் அவர் நடிகர்களைதான் பார்த்திருக்கிறார், இயக்குநர்களின் அறிமுகம் கிடைக்கவில்லை. பின் விருகம்பாக்கத்தில் இருக்கும் கடைக்கு மாற்றுமாறு உரிமையாளரிடம் கூறியிருக்கிறார் வினோத்ராஜ். அந்த கடைக்கு சென்ற பிறகு வரும் இயக்குநர்களிடம் எல்லாம் தன் பயோடேட்டாவை கொடுத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
கட்சி கொடியை அறிமுகப்படுத்திய த.வெ.க!
Kottukkaali Director

இதுகுறித்து அவர் கூறியதாவது, “நிறைய படங்கள் பார்த்தேன். திருமண மண்டபங்களில் போய் சாப்பிடுவேன். முதலில் கூச்சமாக இருந்தது. அதன் பிறகு பழகிவிட்டது. பயந்து பயந்து சாப்பிட ஆரம்பித்து அதன் பிறகு கல்யாண வீட்டுக்காரோங்க மாதிரி தைரியமாக சாப்பிட ஆரம்பித்தோம் நானும், நண்பர்களும். ஒரு கல்யாணத்தில் சாப்பிட உட்கார்ந்தபோது மாட்டிக்கிட்டோம். அப்போது என்னையும், நண்பர்களையும் வெளியே அனுப்பிவிட்டார்கள்.” என்றார்.

கொட்டுக்காளி படத்தைப் பார்த்து படத்தின் இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் கமல். இதனையடுத்து நாளை கொட்டுக்காளி படம் வெளியாகவுள்ளதை எதிர்நோக்கித்தான் தமிழக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com