தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா குறித்து மீண்டும் சமூக வலைத்தளங்களில் விவாதம் சூடுபிடித்துள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'குபேரா' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா, தனுஷ், இயக்குநர் சேகர் கம்முலா மற்றும் சிறப்பு விருந்தினராக எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், தொகுப்பாளர் ராஷ்மிகாவை நோக்கி, நாகார்ஜுனா, தனுஷ் மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகிய மூன்று நடிகர்களிடமிருந்து எந்தெந்த விஷயங்களை எடுத்துக் கொள்ள விரும்புவீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராஷ்மிகா, நாகார்ஜுனாவின் "வசீகரத்தையும், அவரது ஆராவையும்" எடுத்துக்கொள்வேன் என்று கூறினார். மேலும், தனுஷிடம் இருந்து அவரது "நடிப்பு, இயக்கம், நடனம் செய்யும் திறன்" அனைத்தையும் எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தார்.
ஆனால், விஜய் தேவரகொண்டா குறித்து கேள்வி எழுப்பப்பட்டதும், ராஷ்மிகா மந்தனா வெட்கத்தில் முகம் சிவந்தார். புன்னகையுடன், "அவரிடம் உள்ள அனைத்து தகுதிகளையும் எடுத்துக்கொள்வேன்" என்று பதிலளித்தார். இந்த பதில் அரங்கில் கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை ஏற்படுத்தியதுடன், சமூக வலைத்தளங்களிலும் பெரும் வைரலாகி வருகிறது.
"கீதா கோவிந்தம்" மற்றும் "டியர் காம்ரேட்" போன்ற படங்களில் இணைந்து நடித்ததில் இருந்தே விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையிலான காதல் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. இருவரும் பொது இடங்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் ஒன்றாகச் செல்வது, பிறந்தநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வது போன்ற செயல்கள் இவர்களின் உறவை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன. 'குபேரா' பட நிகழ்வில் ராஷ்மிகா அளித்த இந்த வெளிப்படையான பதில், ரசிகர்கள் மத்தியில் இவர்களின் திருமணம் குறித்த எதிர்பார்ப்புகளை மேலும் தூண்டிவிட்டுள்ளது. இருப்பினும், இருவரும் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.