அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

kushboo with Rajinikanth
kushboo with Rajinikanth
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

ரஜினியுடன் தான் அந்த படத்தில் நடித்திருக்கக் கூடாது, ரசிகர்களுக்கும் அது பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் குஷ்பு.

குஷ்பு பாலிவுட்டிலிருந்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானவர். ஆகையால், வந்த புதிதில் மொழி தெரியாமல் பெரிதும் தடுமாறினார். அதுவும் தமிழ் மட்டுமல்ல, கன்னடா, தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் அப்போது நடித்ததால், அந்த இளம் வயதில் அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். அந்தப் படங்களில் வேலை செய்யும் அனைவரிடமும் பேசி மொழிகளை கற்றுக்கொண்டார். அந்தவகையில் ரஜினியும் குஷ்புவும் சேர்ந்து எத்தனையோ படங்கள் நடித்திருக்கின்றனர்.  

குஷ்பு ரஜினியுடன் இந்தப் படத்தில் நடித்திருக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். இதுகுறித்து குஷ்பு கூறியதைப் பார்ப்போம்.

“படத்தின் கதையை சிவா எனக்கு கூறும்போது, நீங்களும் மீனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும். ஆனால் ரஜினிக்கு ஜோடியே இல்லை என்று கூறினார். ஷூட்டிங் நடந்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று நயன்தாரா உள்ளே வந்தார். எங்கக்கிட்ட ஒரு டாக்டர் ரோல் வரும். அவுங்கதான் ஜோடி. ஆனால் அது மெயின் ரோலா காமிக்கப் போறதுல்ல. அதனால சின்ன ஆர்டிஸ்ட்தான் பாப்போம் என்றார். ஆனால் அப்படி நடக்கவில்லை.

படத்தின் கதை மாறிய நிலையில், இடைவேளை வரை மட்டுமே நானும் மீனாவும் வந்தோம். ரஜினி தன் தங்கைத் தேடிக் கொண்டு மும்பை செல்லும்போது நானும் மீனாவும் செல்வோம். இந்தக் கதை அனைத்தும் மாற்றிவிட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
ராஜமவுலியை தொடர்ந்து ஆஸ்கார் விருதை குறிவைத்து காய் நகர்த்தும் அமீர்கான்!
kushboo with Rajinikanth

ஏன் வர்றோம் ஏன் போறோம் என ஒண்ணுமே தெரியாம போச்சு. சில நேரத்துல இது மாதிரி நடக்க தான் செய்யும் என மனசை தேத்திக்கிட்டோம்.  இப்போ திரும்பிப் பாத்தா ஏன்டா நடிச்சோம்னு இருக்குது.

ஆனா ரஜினி சார் கூட திரும்பவும் நடிச்சது, சிவா டைரெக்ஷன் இது எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது.” என்றார் குஷ்பு.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான படம் அண்ணாத்த. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா  ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் குறித்துதான் குஷ்பு பேசியிருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com