2012-ம்ஆண்டு தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய மிருணாள் தாகூர், 2014-ம் ஆண்டு ‘ஹலோ நந்தன்’ என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையில் கால் பதித்தார். அந்த படம் தோல்வியை தழுவிய போதும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த மிருணாள் தாகூருக்கு 2022-ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ‘சீதா ராமம்’ இவருக்கு மிகப்பெரிய அளவில் பிரேக் கொடுத்தது என்றே சொல்லலாம்.
அதனை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியாக படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்ததுடன் முன்னனி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னனி கதாநாயகியாக திகழும் மிருணாள் தாகூர் தெலுங்கு படவுலகில் ரசிகர்களின் கனவுகன்னியாக வலம் வருகிறார். அதுமட்டுமின்றி இவர் நடிகர் நானியுடன் சேர்ந்து நடித்த ‘ஹாய் நானா’ திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுத்தந்தது என்றே சொல்லலாம்.
‘தூபான்', ‘தமாகா', ‘சீதா ராமம்', ‘பீப்பா' உள்பட பல படங்களில் நடித்துள்ள இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் ‘பேமிலி ஸ்டார்' படம் வெளியானது. அதுமட்டுமின்றி ‘கல்கி 2898 ஏ.டி.' படத்திலும் நடித்திருந்தார்.
பாலிவுட், தெலுங்கு சினிமாவில் கலக்கி வரும் மிருணாள் தாகூர் தமிழ் படங்களிலும் நடிக்க திட்டமிட்டு அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். அந்தவகையில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக அவர் புதிய படங்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையை பற்றி அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறும்போது, "எனது சிறு வயதில் இருந்தே கமல்ஹாசனை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன்.
அவருடன் ஜோடி சேருவது என் நெடுநாள் கனவு என்றும் சொல்லலாம். குறிப்பாக அவருடன் நடனமாட நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். அந்த நாள் எப்போது அமையும் என்பது தெரியாது. ஆனாலும் நான் காத்திருக்கிறேன்" என்றார்.
இதனை தொடர்ந்து உங்களின் ஆசை விரைவில் நிறைவேறும் என்று மிருணாள் தாகூருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.