கோலிவுட்டில் அறிமுகமாகவிருக்கும் மிருணாள் தாகூர்… யார் படத்தில் தெரியுமா?

Mrunal Thakur
Mrunal Thakur
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

சீதாராமம் படத்தின்மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான மிருணாள் தாகூர் கோலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார் என்ற செய்திகள் வந்துள்ளன.

சின்னத்திரை நடிகையாக தனது பயணத்தை ஆரம்பித்து இன்று வெள்ளித்திரையில் ஜொலிக்கும் ஒரு நடிகை மிருணாள் தாகூர். இருமலர்கள் என்ற டப்பிங் சீரியல் மூலம் தென்னிந்தியாவிலும் பிரபலமானவர்தான் மிருணாள் தாகூர்.

அவரை அப்போது மிருணாள் தாகூர் என்று சொன்னால் தெரியாது. அம்மு என்று சொன்னால் அனைவருக்குமே தெரிந்துவிடும். அந்தளவிற்கு இந்த சீரியலின்மூலம் பிரபலமானார். இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. ஹிந்தியில் சூப்பர் 30 போன்ற படங்களில் நடித்தார். ஆனால், அப்போதெல்லாம் வட இந்தியாவில் மட்டுமே அவர் வெள்ளித்திரையில் பிரபலமானது தெரியவந்தது. ஆனால், துல்கர் சல்மானுடன் நடித்த சீதா ராமம் படத்தின்மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் பேராதரவையும் அன்பையும் பெற்றார். இன்று மிருணாள் தாகூருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து அவர் நானியுடன் ஹாய் நான்னா படத்தில் நடித்து மீண்டும் ஒருமுறை பிரபலமானார். பின்னர் விஜய் தேவரகொண்டாவுடன் The Family Man படத்தில் நடித்தார்.

இதனையடுத்து அவர் வட இந்தியாவைவிட தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியானார். இந்தநிலையில் அவர் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகவுள்ள செய்தி தமிழ் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. அதாவது மிருணாள் தாகூர் சூர்யா 45 படத்தில் நடிக்கவுள்ளாராம். முதல் படமே சூர்யாவுடன் என்பதால் சூர்யா ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.  49 வயதாகும் நடிகர் சூர்யா தனது 45வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம், ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை தூண்டிய படமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
நான் நடிக்கவே வேண்டாம் என்றிருந்தேன்… ஆனால் அவர்தான் என்னை நடிக்கத் தூண்டினார் – கஜோல்!
Mrunal Thakur

காரணம், கடந்த 2 ஆண்டுகளாக சூர்யாவின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் தற்போது ‘கங்குவா’ படம் வெளியாவதை தொடர்ந்து கூடிய விரைவிலேயே ‘சூர்யா 44’ படமும் ரிலீஸாகிவிடும் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அவர் தனது 45வது படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குபவர், ஆர்.ஜே.பாலாஜி. இசையமைப்பது ஏ.ஆர்.ரஹ்மான்.

மிருணாள் தாகூர் இந்தியிலும் பல படங்களில் கம்மிட்டாகி உள்ளார். பூஜா மேரி ஜான், ஹாஇ ஜவனீ தோ இஷ்க் ஹோனா ஹாய், சன் ஆஃப் சர்தார் 2, தும் ஹோ தோ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் சில ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com