நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு: வெளியாகும் ‘இதயம் முரளி’ – சுதா கொங்கராவிற்கு பின்னடைவு!

சுதா கொங்கரா மற்றும் டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இடையேயான சட்டப் போராட்டம் மற்றும் இதயம் முரளி படத்தின் வெளியீடு.
Sudha kongura Payment issues
Chennai High court and sudha kongura
Updated on

பராசக்தி திரைப்படத்தை இயக்கியதற்கு தனக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக கூறி , டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட உள்ள 'இதயம் முரளி' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு , சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதாகொங்கரா வழக்கு தொடுத்திருந்தார். ஹிந்தி எதிர்ப்பை மையமாக வைத்து சுதா கொங்கரா எடுத்த திரைப்படம் தான் பராசக்தி. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் , அதர்வா முரளி , ஶ்ரீ லீலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

திரைப்படத்தின் கதை 60 ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பதாக இருந்ததால் , படத்திற்காக ஏராளமாக செலவு செய்யப்பட்டிருந்தது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ₹142 கோடி என்று சொல்லப்படுகிறது. ஆனால் , அந்த அளவு பணத்தை வசூலிக்காமல் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்ததாகவும் , இதனால் பட தயாரிப்பாளருக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு பின்னர் பராசக்தி திரைப்படத்தை தயாரித்த டான் பிக்சர்ஸ் நிறுவனம், அதர்வாவை வைத்து 'இதயம் முரளி' என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட காத்திருக்கிறது. இந்நிலையில் தனக்கு மீதமுள்ள ₹8.39 கோடி சம்பளத்தை வழங்கும் வரையில் 'இதயம் முரளி' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சுதா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

முதலில் 'பராசக்தி' திரைப்படம் 'புறநானூறு' என்ற பெயரில் , சூர்யாவின் 2டி என்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்க இருந்தது. அதற்காக அந்த நிறுவனத்திலிருந்து சுதா ₹4.12 கோடி பெற்றிருந்தார். பின்னர் சூர்யா அதில் இருந்து வெளியேறியதால் டான் பிச்சர்ஸ் நிறுவனம் சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்தது.

2024-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி டான் பிச்சர்ஸ் நிறுவனம் சுதாவிற்கு ₹15 கோடி சம்பளம் பேசி இருந்தது. அதன் பின்னர் 2 டி என்டர்டெயின்மண்ட் நிறுவனத்திற்கு ₹5.8 கோடி செலுத்தி பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, திரைப்படத்தின் உரிமையை பெற்றுக் கொண்டார். இது பற்றி எதையும் அவர் தங்களிடம் தெரிவித்ததில்லை. சுதா கொங்கராவிற்கு ₹8.5 கோடி வரை சம்பளம் வழங்கியுள்ளதாக டான் பிக்சர்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Sudha kongura issued with Don pictures
sudha Kongura and AtharvaSudha kongura

டான் பிக்சர்ஸ் வழக்கறிஞர் வாதப்படி "பராசக்தி திரைப்படத்தின் உரிமைகளை 2004 டிசம்பர் 18 ஆம் தேதி அன்று , சுதா கொங்காரா அன்று 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்திற்கு அளித்தார். 2004 டிசம்பர் 20 ஆம் தேதி 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் டான் பிக்சர்ஸ் நிறுவனம் காப்புரிமை பரிமாற்ற ஒப்பந்தம் செய்து அனைத்து உரிமைகளையும் பெற்றது".

பின்னர் 2026 ஜனவரி 10 அன்று 'பராசக்தி' படம் வெளியானது. சுதா கொங்கரா ₹4.12 கோடி இறுதிச் சம்பளமாக பெற்றுக் கொண்டு , ரத்து ஒப்பந்தத்தில் திரைப்படத்தின் தனது உரிமைகள் அனைத்தையும் தயாரிப்பாளருக்கு வழங்குகிறார் என்று கையெழுத்திட்டுள்ளார்.

இது தெரியாமல் டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சுதாவிற்கு ₹8.5 கோடி கொடுத்துவிட்டது. மேலும் படத்தின் காட்சிகள் கசிந்ததால் தங்களுக்கு ஒடிடி விற்பனை விலையும் குறைந்து நஷ்டமும் ஏற்பட்டது. இதுமட்டுமல்லாமல் திரைப்படம் வெளிவரும் முன், ஒரு எழுத்தாளர் இந்தக் கதைக்கு உரிமை கோரியதால் அந்த வழக்கிற்கும் தயாரிப்பு நிறுவனம் நிறைய பண விரயம் செய்துள்ளது. அதனால் , இது தொடர்பான விவகாரங்களை ஒரு நடுவர் மன்றத்தின் முன்னிலையில் சரிசெய்ய வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் கோரியுள்ளது.

இறுதியாக உயர் நீதிமன்றம் "சுதா கொங்குரா மற்றும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுக்கு இடையேயான பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதே நேரம் இதயம் முரளி திரைப்பட வெளியீட்டிற்கு எந்த தடையும் விதிக்க முடியாது" என்று உத்தரவிட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com