'வாரிசு' படம் வெளியான சமயத்தில் படக்குழுவினர் பல நேர்காணல்களில் கலந்துக்கொண்டனர். அப்படி ஒரு நேர்காணலில்தான் விஜயுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து அப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகையும், நடிகர் ஷாமும் மனம் திறந்து பேசியிருக்கிறார்கள்.
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ஒரு ஆக்ஷன் கலந்த குடும்ப படமாகும். ஒரு பெரிய பிஸினஸ் குடும்பத்தில் பிறந்த விஜய், குடும்பத்தைவிட்டு விலகிச் சென்று, மீண்டும் என்ட்ரி கொடுத்து பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்ப்பார்.
இந்தப் படத்தில் நடித்தது குறித்தும், விஜயுடன் பயணித்தது குறித்தும் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்த ஜெயசுதா மற்றும் அண்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்த ஷாம் இருவரும் பேசியிருக்கிறார்கள்.
'வாரிசு' திரைப்படம், விஜய்யின் ஸ்டைலான நடிப்பு, எமோஷனல் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு ஆகியவற்றின் கலவையாக இருந்தது. குடும்பப் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், உறவுகளின் மதிப்பை உணர்த்தியதோடு, ஷாம் போன்ற முக்கிய நடிகர்களின் பங்களிப்பால் கூடுதல் கவனம் பெற்றது.
சகோதரர்களுக்கும் தந்தைக்கும் இடையே உள்ள விரிசலைச் சரிசெய்து, அவரது குடும்ப பிஸினஸைக் காப்பாற்றப் போராடுகிறார்.
'வாரிசு' திரைப்படம், குறிப்பாகக் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான ஈகோ மோதல்கள், சொத்துக்காக நடக்கும் சூழ்ச்சிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, இறுதியில் உறவுகளின் பிணைப்பே எல்லாவற்றையும் விட வலிமையானது என்ற கருத்தைக்கொண்டது.
அந்த நேர்காணலில், “சாப்பிடும்போதும், டையலாக் பேசும்போதும் மட்டுமே வாயைத் திறக்க முடியும். மற்றப்படி செட்ல யாரும் வாய திறக்க முடியாது. யாரும் பேச கூடாது. ஒரு சீரியஸான விஷயம் பேசலாம். கேரக்டர் என்ன? இதுமாதிரிதான் பேச முடியும். ஷாம் பேசனுனா கூட விஜய்கிட்ட காதுல கிசு கிசுனு தான் பேசுவாரு. அப்படி இருக்கும் செட்டு. லஞ்ச் டைம்ல வேணும்னா வாய திறக்கலாம்.” என்று ஜெயசுதா பேசினார்.
இதுகுறித்து ஷாம் பேசும்போது, “நான் வேணும்னே பர்பஸா போய் பேசுவேன். ஆனா ஒன்னும் பண்ண முடியாது. ஏனா நான் பேசுற ஆளு அப்டி.” என்று பேசினார்.
இந்தப் படத்தில், நடிகர் ஷாம் அவர்கள் விஜய்யின் சகோதரர்களில் ஒருவராக, ஒரு சீரியஸான மற்றும் அழுத்தமான பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரம், கதையின் திருப்புமுனைகளுக்கும், விஜய்யின் பாத்திரத்தின் பயணத்திற்கும் ஒரு முக்கியத் தூணாக அமைந்தது.
சீரியஸ் கேரக்டரில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷாம் நடித்தது, அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகர் விஜய் அமைதியானவராக இருந்தாலும், செட்டில் அவருக்கு ஈடுகொடுப்பது சக நடிகர்களுக்கு எவ்வளவு கடினம் என்பது இந்த நேர்காணலுக்கு பிறகுதான் ரசிகர்களுக்கு தெரிகிறது.