16-ம் நூற்றாண்டு பாண்டிய மன்னன் இளையராஜா பாடலுக்குள் வந்தது எப்படி? 👀 'சின்ன வீடு' பாடலின் அதிரடி பின்னணி!

Ada Machamulla Machaan Song by Ilaiyaraaja
Ada Machamulla Machaan Song இளையராஜா
Published on

சின்ன வீடு (1985) திரைப்படத்தில் இளையராஜா இசையில், SPB, S. ஜானகி மற்றும் S P சைலஜா பாடிய "அட மச்சமுள்ள மச்சான்" பாடல் உங்களுக்குத் தெரிந்திருக்கும். காமமும் குறும்பும் நிறைந்த பாடல் அது. அதன் ஆரம்பமே கவனத்தை ஈர்க்கும்: SPB அவர்கள் குரலில் "ஓம் காமசூத்ராய நமஹ, ஓம் வாத்சாயனாய நமஹ, ஓம் அதிவீரராமபாண்டியாய நமஹ" என்று மந்திரம் ஒலிப்பது போல் தொடங்கும்.

பாடல் காமக்குறும்பு என்பதால் காமசூத்திரம் பற்றி மந்திரம் ஒலிப்பது ஆச்சரியமில்லை. அந்த நூலை எழுதியவரான வாத்சாயனாயருக்கு துதி பாடுவதும் புரிகிறது. ஆனால் கடைசியில் வரும் அந்த அதிவீரராமபாண்டியன் யாரு?

இது சாதாரணமாகச் சேர்க்கப்பட்ட பெயரல்ல; இந்தப் பாடலின் கருப்பொருளுடன் இணைந்த ஆச்சரியமான வரலாற்றுக் குறிப்பு இது! இதை புரிந்து கொள்ள இந்த படத்தின் கதையையும், எந்த இடத்தில் இந்த பாடல் வருகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

படத்தோட கதை சிம்பிள்: தனக்கு ஒரு அழகு ராணிதான் மனைவியா வரணும்னு நெனைக்கிற ஒருத்தனுக்கு, தான் எதிர்பார்த்தபடி மனைவி அமையலைன்னா, அவனுக்கு வர்ற ஏமாற்றமும், அதனால அவன் திசை மாறிப் போறதும்தான் கதை. அவனோட கற்பனைகள் (Fantasies) எப்படி இருக்கும்னு காட்டுறதுதான் இந்தப் பாட்டு. அவனுடைய கற்பனையில் அவன் மனைவி அத்தினி, சித்தினி, சங்கினி, பத்மினி என்று நான்கு வகையான பெண்கள் போல இருக்கணும்னு நினைப்பான்.

சரி விஷயத்துக்கு வருவோம்... யார் அந்த அதிவீரராமபாண்டியன்?

ஆசை, இன்பம் போன்றவற்றுக்கு வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்திரம் போலவே, பெண்களின் அழகு, குணம் போன்றவற்றை விவரிக்கும் நூல் 'ரதிரஹஸ்யம்'. இது கொக்கோகர் என்பவர் இயற்றிய சமஸ்க்ருத நூலாகும். அந்த நூல்ல, 4 விதமான பெண்களைப் பத்திச் சொல்லியிருப்பாங்க.

பத்மினி: அழகு நிரைஞ்சவங்க

சித்திரினி (சித்தினி): கலை நயம் மிக்கவங்க

சங்கினி: அறிவானவங்க

ஹஸ்தினி (அத்தினி): பலம் உள்ளவங்க

இந்த ரதிரஹஸ்யம் நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் தான் அதிவீரராம பாண்டியன். இவர் 16-ம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆண்ட பாண்டிய மன்னர். இவர் ஒரு சிறந்த தமிழறிஞரும் கவிஞருமாவார். இவர்தான் சமஸ்கிருத நூலான 'ரதிரஹசியத்தை' தமிழில் 'கொக்கோகம்' என்ற பெயரில் மொழிபெயர்த்தார். இவருடைய மொழிபெயர்ப்பின் மூலமாகத்தான் பத்மினி, சித்திரினி போன்ற பெயர்கள் தமிழில் பிரபலமாகி, பின்னர் ஒரு திரைப்படப் பாடலுக்குள் நுழைய முடிந்தது!

இதையும் படியுங்கள்:
கோவில் அர்த்த மண்டபத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா… இதுதான் காரணம்!
Ada Machamulla Machaan Song by Ilaiyaraaja

பாடலின் தொடக்க மந்திரத்தில் அதிவீரராம பாண்டியன் பெயரைச் சேர்த்தது, பாடலாசிரியர் முத்துலிங்கமும் இளையராஜாவும் சேர்ந்து, இந்தப் பாடலின் விஷமக் குறும்பு கருப்பொருளுக்குப் பின்னால் இருக்கும் ஆழமான பண்டைய இலக்கிய ஆதாரத்தை அங்கீகரித்த ஒரு புத்திசாலித்தனமான செயல்!

ஆக, ஒரு கொண்டாட்டமான, குதூகலமான பாடலுக்குள்ளும் கூட ஆழமான வரலாறு மற்றும் இலக்கியத் தகவல்கள் நிறைந்திருக்க முடியும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com