முதல்முறையாக ஈழத் தமிழ் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!

Ilayaraja
Ilayaraja
Published on

ஈழத் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக, உலகப் புகழ் பெற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் முழுநீள திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். ஓசை பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பெயர் "அந்தோனி".

"அந்தோனி" திரைப்படம் ஈழ மக்களின் வாழ்வியலையும், குறிப்பாக புலம்பெயர் மக்களின் உணர்வுகளையும் ஆழமாகப் பதிவு செய்யும் ஒரு சமூகத் திரைப்படம் எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில், ஈழத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் கயல் வின்சன்ட் மற்றும் இந்திய நடிகை TJ. பானு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2025 மார்ச் 5 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் பூஜையுடன் தொடங்கி, இடைவிடாது 45 நாட்கள் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஈழத்தின் இயற்கை நிறைந்த சில இடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது.

ஏப்ரல் 30 ஆம் தேதி படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, post-production பணிகள்  துரிதமாக நடைபெற்றன. எடிட்டிங், டப்பிங், சவுண்ட் மிக்ஸிங் போன்ற வேலைகள் முழுவீச்சில் நடந்து ஆகஸ்ட் 10, 2025 அன்று படத்திற்கு இசை சேர்க்கும் பணிக்காக இளையராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

"அந்தோனி" படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும், ஈழத் தமிழ்த் திரைப்படத் துறைக்கு ஒரு உலகத் தரம் வாய்ந்த இசையமைப்பாளரை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கனவுடன் இளையராஜாவை அணுகினர். படத்தின் கதையைக் கேட்டவுடன், அந்த கதையின் ஆழத்தையும், கருத்தையும் உணர்ந்த இசைஞானி, எந்தவிதத் தயக்கமுமின்றி உடனடியாக இசையமைக்க சம்மதம் தெரிவித்தார். மேலும், இரண்டு நாட்களிலேயே படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல்கள் உருவாக்கும் பணிகளைத் தொடங்கினார். தற்போது, இந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இதையும் படியுங்கள்:
ஈக்கள் எதையும் அப்படியே சாப்பிடாதாமே... பின்ன, எப்படி சாப்பிடும்?
Ilayaraja

இளையராஜா அவர்களின் இசை, படத்தின் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு மேலும் மெருகூட்டி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் எனத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "அந்தோனி" திரைப்படம் ஈழத் தமிழ்த் திரையுலகில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் இசை மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

ஈழத் தமிழ்த் திரையுலகிற்கு இது ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாகவும், மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் இசைஞானி இணைந்தது, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com