5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

songs
Importance of songs in Indian cinema!
Published on

இந்திய சினிமா, உலகின் மிகப்பெரிய சினிமா துறைகளில் ஒன்று. இங்கு தயாரிக்கப்படும் படங்கள், அதன் கதை, நடிப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றை விட பாடல்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.‌ குறிப்பாக, 5 நிமிடங்கள் மட்டுமே வரும் பாடல்களுக்கு கோடிகளில் செலவு செய்யப்படுகிறது.‌ இது ஏன் என எப்போதாவது யோசித்ததுண்டா? இதற்குப் பின்னால் உள்ள உண்மை என்ன? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம். 

இந்திய சினிமாவில் பாடல்கள் என்பது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, கதையின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. கதாநாயகன், கதாநாயகி இடையேயான காதல், பிரிவு, சந்தோஷம், துக்கம் போன்ற உணர்வுகளை பாடல்கள் வாயிலாக மிகவும் திறம்பட வெளிப்படுத்தலாம். இதனால், பார்வையாளர்கள் கதாபாத்திரங்களுடன் எளிதில் ஒன்றி இணைய முடியும்.  

இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களின் வாழ்க்கை முறை, மரபுகள், பழக்கவழக்கங்கள் பாடல்களில் பிரதிபலிக்கின்றன. இதனால், பாடல்கள் மக்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி கலாச்சாரத்தை பாதுகாக்க உதவுகின்றன. 

இந்திய சினிமா ஒரு மிகப்பெரிய வர்த்தகம். பாடல்கள் படத்திற்கு கூடுதல் வருவாயை ஈட்டித் தருகின்றன. பாடல்கள் வெளியானவுடன் அவை ரேடியோ, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் என எங்கும் ஒலிக்கின்றன. இதனால், படம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து பார்வையாளர்களை திரையரங்குக்கு இழுக்கிறது. 

பாடல்களில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் மக்களிடையே அதிக பிரபலமடைகின்றனர். ஒரு பாடல் வெற்றியடைந்தால் அதில் நடித்த நடிகர் நடிகைக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும். இதனால், நடிகர் நடிகைகள் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 

இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பாடல்களின் தரம் அதிகரித்துள்ளது.‌ உயர்தர கேமராக்கள், ஒளி அமைப்புகள், கிராபிக்ஸ் போன்றவற்றின் மூலம் பாடல்களை மிகவும் திறம்பட உருவாக்குகின்றனர். இதற்கு அதிக செலவானாலும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் பாடல்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 

இதையும் படியுங்கள்:
இந்திய பில்லியனர்கள்.. ஓய்வு நேரம்.. இப்படிதானா? 
songs

இப்படி, இந்திய சினிமாவில் ஐந்து நிமிட பாடலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த காலம் முதலே இந்தியர்கள் மனதில் பாடல்கள் இடம் பிடித்துவிட்டதால், திடீரென அவை இல்லாமல் திரைப்பட ரசிகர்களால் படங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பாடல் இல்லாமல் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com